நித்தியகடன் அக்டோபர் 27 2021

🎱🎭🎱🎭🎱🎭🎱🎭🎱🎭🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 27*

🎱🎭🎱🎭🎱🎭🎱🎭🎱🎭🎱

♻️ *இன்றைய நித்தியகடன்*

♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

♻️ *இன்றைய சாதகம்*

♻️ புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
♻️ *இன்றைய நற்சிந்தனை*

♻️ ஒவ்வொரு தனிமனிதனும் அறிவில் உயர முடியாததற்கான மூன்று வகையான காரணங்களை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அடிக்கோடிட்டு விளக்கியிருக்கிறார்கள்.
1, அறியாமை 2, அலட்சியம் 
3, உணர்ச்சிவயம் இந்த மூன்று வகையான நோயும் மனதில் இருக்கும்வரை அறிவில் உயரும் போதெல்லாம் இது இடைமறித்து தடுத்துக் கொண்டும், தடத்தை மாற்றி அமைத்துக் கொண்டும் இருக்கும். இவைகளை வைத்துக்கொண்டு அறிவில் உயர்வது என்பது இயலாத காரியமாகும். அறிவு உயர்வு பெறவேண்டுமென்று எண்ணும் ஒவ்வொருவரும், இந்த அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்பட்ட செயல்களை அறவே விட்டுவிட வேண்டும்.

♻️ *இன்றைய தற்சோதனை*

♻️ அறியாமை என்பது எந்த ஒன்றையும் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது, அலட்சியம் என்பது தெரிந்து கொண்ட நல்ல செய்திகளை வாழ்க்கையில் கடைபிடிக்காமல் இருப்பது, உணர்ச்சி வயம் என்பது பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகள் தான். இவற்றின் விளைவுகளை நன்றாக தற்சோதனை செய்து எவற்றை எல்லாம் காலத்தால் தவிர்க்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் தவிர்த்துக்கொண்டே வந்தால் அறிவில் உயரமுடியும்.

♻️ *இன்றைய பண்புப்பயிற்சி*

♻️ ஆக இந்த மூன்று வகையான குறைபாடுகள் சரிசெய்து கொள்ள முறையானதொரு பயிற்சியின் துணை என்பது இன்றியமையாததாகும். பயிற்சி இல்லாமல் எவ்வளவுதான் முயற்சித்தாலும் சறுக்கல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கு வகையான கட்டமைப்பை கட்டிக்கொண்டு, அறிவின் உச்சநிலைக்கு சென்று அயரா விழிப்பு நிலையோடு, நாமும் வாழ முடியும் நம்முடைய அடுத்த தலைமுறையும் வாழ்வதற்கான வழிவகை செய்ய முடியும். வாழ்வோம் வாழவிடுவோம். வாழ்க வளமுடன்...

♻️ *இன்றைய மூலிகை*

♻️ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

♻️ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

♻️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♻️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♻️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments