🍁🔳🍁🔳🍁🔳🍁🔳🍁🔳🍁
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 26*
🍁🔳🍁🔳🍁🔳🍁🔳🍁🔳🍁
⛳ *இன்றைய நித்தியகடன்*
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ *இன்றைய சாதகம்*
⛳ செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
⛳ *இன்றைய நற்சிந்தனை*
⛳ சம தளத்திலும், மேட்டிலும், பள்ளத்திலும் செல்லும் வாகனத்திற்கு எரிபொருள் ஒரே மாதிரியாக செலவு ஆகாது. ஏற்றத்தாழ்வான பாதையும் வாகனத்தின் எடையுமே இந்த செலவை தீர்மானிக்கிறது. இதுபோன்று நம்முடைய மனதில் நல்ல எண்ணங்களோடும், செயல்பாடுகளோடும், தீய எண்ணங்களும் தீய செயல்பாடுகளோடும், இருக்கும்போது நம் உடலில் சீவகாந்தம் சமமாகவும் அதிகமாகவும் செலவாகிறது. வாழ்க்கையிலும் பலவிதமான சோதனைகளும், சாதனைகளும் தொடர்கின்றன.
⛳ *இன்றைய தற்சோதனை*
⛳ நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நல்ல சூழ்நிலைகள் அமைவதற்கும் தவம், தற்சோதனை, உடற்பயிற்சி, காயகல்பம் இவைகளின் நல்ல விளைவுகளை அனுபவமாக பெறும் போதும், ஜீவகாந்தம் நிரம்பி இருக்கும் போதும் அவைகள் எந்த காரணத்தின் அடிப்படையில் அமைந்தன என்பது பற்றி நாம் விரிவாக தற்சோதனை செய்து தெளிவாக இருக்க வேண்டும். ஏனோ தானோ என்று சிந்தனைத் தெளிவு இல்லாமல் இருக்கக்கூடாது. எந்த ஒரு விளைவுக்கும் இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள், திறமை இவைகளுக்கு ஏற்ப விளைவுகள் மாறுபடும். எது எப்படி அமைந்தது என்று தெளிவான சிந்தனையை ஆராய்ச்சியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
⛳ *இன்றைய பண்புப் பயிற்சி*
⛳ நம் வாழ்வில் நடக்கக்கூடிய நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் என்ன காரணம் என்று சிந்தித்து ஆய்வு செய்து இதில் தெளிவாக வாழக்கூடிய பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சியோடு நாம் வாழ்வை எப்போது வாழ தொடங்குகிறோமோ, அப்போது நம் வாழ்க்கையின் நுட்பமான நிலைகளுக்குள் நாம் பயணிக்க துவங்குவோம். இந்த பயணத்தின் இடைப்பட்ட நிலையும் முடிவும் ஞானத்தை உருவாக்கும். வாழ்க வளமுடன்...
⛳ *இன்றைய மூலிகை*
⛳ *நீராவி பிடித்தல்* குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
⛳ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும்,
⛳ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⛳ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
⛳ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment