நித்தியகடன் அக்டோபர் 25 2021

🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 25*

🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️

💥 *இன்றைய நித்தியகடன்*

💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

💥 *இன்றைய சாதகம்*

💥 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
💥 *இன்றைய நற்சிந்தனை*

💥 ஐந்து புலன்கள் வழியாக நாம் எதை அனுபவமாக பெறுகிறோமோ, அதுவே மீண்டும் மீண்டும் நமக்குள் எண்ணங்களாக எழுகின்றன. ஏற்கனவே இருக்கின்ற பதிவுகள் என்னவோ அதுவே நம் எண்ணங்களாக வெளிப்படுகிறது. இந்த உண்மை இயற்கைநீதியின் அடிப்படையில் சிந்திக்கும் போது நமக்கு சொந்தமான எண்ணம் என்று இங்கு எதுவுமே கிடையாது. நமக்குள் இருக்கக்கூடிய பதிவுகளின் தூண்டுதலே நம்முடைய தேவையாகவும் எண்ணங்களாகவும் உடல் செல்கள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

💥 *இன்றைய தற்சோதனை*

💥 நான் நினைத்தது நடந்தே தீரவேண்டும், நான் நினைத்ததை செயல் படுத்தியே தீருவேன் என்றெல்லாம் அதிகாரத்தில் நாம் செயல்புரிவது அனைத்துமே மாயை. வினை பதிவுகளின் தூண்டுதல்கள் தான் நம்மை ஆட்டி வைக்கிறது. வினை பதிவுகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் போது, அது நம்முடைய தேவையாகவும், நம்முடைய எண்ணமாகவும் நமக்குள் தோன்றுகிறது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டு தற்சோதனையில் உங்களை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

💥 *இன்றைய பண்புப் பயிற்சி*

💥 "இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே நம்முடையது அல்ல" தான் தனது என்ற பொருள் பற்றையும் அதிகாரப் பற்றையும் விட்டு கொஞ்சம் நாம் நம்மிடமிருந்து விலக்கிவைக்க வேண்டும். நாம் நாமாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். போலியாக வாழுகின்ற இந்த நிலைப்பாட்டிலிருந்து தயவு செய்து நம்மை மீட்டு எடுத்து உண்மையாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். எந்த பொருளும், எந்த அதிகாரமும் நம்முடைய உடல் நோயையும், மனநோயையும் போக்கப் போவது கிடையாது. பற்றற்ற பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

💥 *இன்றைய மூலிகை*

💥 *இஞ்சி+தேன்* தேவையான பொருட்கள், இஞ்சி 4 கிராம் 
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்

💥 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.

💥 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.

💥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments