நித்தியகடன் அக்டோபர் 24 2021

🔲🔶🔲🔶🔲🔶🔲🔶🔲🔶🔲

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 24*

🔲🔶🔲🔶🔲🔶🔲🔶🔲🔶🔲

🎌 *இன்றைய நித்தியகடன்*

🎌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎌 *இன்றைய சாதகம்*

🎌 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🎌 *இன்றைய நற்சிந்தனை*

🎌 "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" இந்த வாசகங்கள் அனைத்தும் பரவலாக உலகில் பேசப்பட்டு வருகிறது. கொஞ்சம் நாம் வேதாத்திரிய ஞானத்தோடு சிந்தனை செய்து பார்ப்போம். ஏனெனில் உலக ஞானம் என்பது மேலோட்டமாக இருக்கிறது. ஆனால் வேதாத்திரிய ஞானம் என்பது எங்கும் எதிலும் விடுபட்டு போகாத முழுமையான ஞானமாகும்...

🎌 *இன்றைய தற்சோதனை*

🎌 அணுக்களால் ஒன்றுபட வேண்டும், அணுக்களால் கூடி வாழ வேண்டும், அணுச்சிதைவு இல்லாமல், அணுப்பிழவு இல்லாமல், அணுக்களை அடிப்படையாக கொண்ட இந்த பரு உடல் அமைப்பை, அணுக்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து அரவணைத்துக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியோடும், நல்ல சிந்தனை செயல்பாடுகளோடும், வாழ்வாங்கு வாழ்வதற்கு, இந்த அணு தன்மையில் நல்லதொரு இணக்கமும் நட்பும் உருவாக வேண்டும். அணுக்களின் இந்த சிறப்பான இயக்கத்தால் உருவாவதுதான் தான் தனது என்ற பொருள் பற்றையும் அதிகாரப் பற்றையும், நம்மிடமிருந்து விலக்கி வைக்கக்கூடிய அருட்பேராற்றல் ஆகும்.

🎌 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎌 அணுக்களால் உருவாக்கப்பட்ட இந்த சரீரம் நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் இவற்றில் நாளுக்குநாள் சிறந்து ஓங்க இந்த அணுக்களின் பிணைப்பு பலமாக அமைகிறது. நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர்நிறைஉணர்வு, மன்னிப்பு இந்த பண்புகள் எல்லாம் நமக்குள் மேலோங்க அணுக்களின் கூட்டு இயக்க அமைப்பே அடிப்படை ஆதாரமாகும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை நாள் தவறாமல் செய்து நாமும் நம்முடைய சந்ததிகளும் வாழ்வாங்கு வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...

🎌 *இன்றைய மூலிகை*

🎌 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🎌 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🎌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎌 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎌 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments