🏮🔆🏮🔆🏮🔆🏮🔆🏮🔆🏮
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 19*
🏮🔆🏮🔆🏮🔆🏮🔆🏮🔆🏮
💡 *இன்றைய நித்தியகடன்*
💡 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💡 *இன்றைய சாதகம்*
💡 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
💡 *இன்றைய நற்சிந்தனை*
💡 ஓரிடத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு Transformer தேவைப்படுகிறது. இது போல ஆங்காங்கே நாம் பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மின்மாற்றி மூலமாக மின்சாரத்தை கிராமம், நகரம், தொழிற்சாலை, வீடுகள் என்று பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்கிறோம். இவ்வாறு கொண்டு செல்லப்படும் மின்சாரத்தினுடைய அளவு தொழிற்சாலைகளுக்கும் வீடுகளுக்கும் ஒரே மாதிரியானது அல்ல வேறு வேறு. தேவைக்கு ஏற்ப மின் சக்தியின் அளவு கூட்டியும் குறைத்தும் வழங்கப்படுகிறது.
💡 *இன்றைய தற்சோதனை*
💡 அதுபோலவே நம் உடலிலுள்ள ஏழு சக்கரங்களுக்கு தேவையான அளவிற்கே தவஆற்றல் வழங்கப்படுகிறது. இந்த அளவையும் முறையையும் யார் தீர்மானிக்கிறார் என்றால் அவரவர்களுடைய தன்னார்வமும், விடாமுயற்சியும், வாழும்முறையுமே இதனை தீர்மானிக்கிறது. தற்சோதனை செய்து தன்னை இறை நீதிக்கு ஒத்தவாறு எவர் ஒருவர் தகவமைத்துக் கொள்கிறாரோ, அவருக்கு இந்த ஆற்றல் அந்தந்த சக்கரங்களுக்கு தாராளமாக வழங்கப்படுகிறது. இந்த வாசகங்களை நன்றாக தற்சோதனை செய்யுங்கள். இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கிடையாது. "சொல்லால் மட்டும் நம்பாதீர், சுயமாய் சிந்தித்து தெளிவு பெறுங்கள்".
💡 *இன்றைய பண்புப் பயிற்சி*
💡 இறைவனை உணரக்கூடிய தன்னார்வம் ஒன்றுதான் நமக்குள் உந்து சக்தியாக இருந்து எப்போதும் நம்மை உயர்த்த வல்லது. இந்த தன்னார்வத்தை ஒரு நாளும், ஒரு பொழுதும், ஒரு கணமேனும் இழந்துவிடாமல், எப்போதும் எல்லா வகையான எண்ணம், சொல், செயல் இவைகளின் வழியாக வெளிப்படுத்தி இறைவனை உணரும் பண்பில் உயர்வோம். தன்னைத்தானே உணர்ந்து கொள்ளக்கூடிய தன்னார்வ பண்பில் நாளுக்கு நாள் சிறந்தோங்குவோம். வாழ்க வளமுடன்...
💡 *இன்றைய மூலிகை*
💡 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
💡 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
💡 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💡 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💡 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💡 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment