நித்தியகடன் அக்டோபர் 14 2021

💢🌍💢🌍💢🌍💢🌍💢🌍💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 14*

💢🌍💢🌍💢🌍💢🌍💢🌍💢

🌿 *இன்றைய நித்தியகடன்*

🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌿 *இன்றைய சாதகம்*

🌿 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🌿 *இன்றைய நற்சிந்தனை*

🌿 சாதாரணமான நிலப்பகுதியில் மழை பொழிந்தால், எல்லா வகையான செடிகளும், கொடிகளும் அதில் முளைத்து விடும். ஆனால் பக்குவப்படுத்தப்பட்ட வயல்வெளிகளில் நாம் எதை விதைக்கிறோமோ அது முளைக்கிறது. ஆங்காங்கே சில வேவையற்றவை முளைத்தாலும் அவைகளை கண்டறிந்து எளிதாக களைஎடுத்து விடலாம். திட்டமிட்ட செயல் நம்மிடையே இருக்குமேயானால், பக்குவப்பட்ட மனதை உருவாக்கி கொள்வோமேயானால், அதில் எது விதைக்கப்படுகிறதோ அது மட்டுமே முளைக்கும்.

🌿 *இன்றைய தற்சோதனை*

🌿 பராமரிக்கப்படாத நிலம்போல நம் மனதை ஒருபோதும். விட்டு விடக்கூடாது. பராமரிப்பு இல்லாத போதுதான் பலவகையான தேவையற்ற தேவைகளும், எண்ணங்களும் மனதில் எழுகின்றன. மனதை பக்குவப் படுத்துவது என்றால் தற்சோதனை செய்து, தவம் செய்து தன்னை உயர்ந்த நிலையிலேயே, எப்போதும் வைத்திருப்பது, நிலைநிறுத்திக் கொள்வது, பராமரித்து பாதுகாப்பதேகும்.

🌿 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌿 சிறந்த பண்பாட்டோடும், பழக்கவழக்கங்களோடும் நாம் உயர்வதற்கான முயற்சி செய்யும்போது அதற்கு இடையூறாக நம்முடைய பழைய பழக்கங்கள் ஆங்காங்கே வந்து நம்மை திசை திருப்புவதற்கு முயற்சி செய்யும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் சிறந்த பண்போடும் பழக்கத்தோடும், நிறைவாக ஆன்மீக வாழ்வில் உயர்வோடும் வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🌿 *இன்றைய மூலிகை*

🌿 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🌿 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🌿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌿 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments