நித்தியகடன் அக்டோபர் 13 2021

💠♨️💠♨️💠♨️💠♨️💠♨️💠

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 13*

💠♨️💠♨️💠♨️💠♨️💠♨️💠

♻️ *இன்றைய நித்தியகடன்*

♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

♻️ *இன்றைய சாதகம்*

♻️ புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
♻️ *இன்றைய நற்சிந்தனை*

♻️ எவ்வளவோ இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும், மாற்றங்களையும் கடந்து வந்து அமைந்ததே நம்முடைய இந்த ஞானசரீரம். மனிதனாக மனித கருமையமாக உருவாவதற்காகவே நாம் இறைநிலையில் இருந்து இவ்வளவு தூரம் நீண்ட நெடிய பயணம் செய்திருக்கிறோம். சாதனை புரிவதற்காகவே இந்த மனித வடிவம் பெற்றுள்ளோம். இது விலங்குகளை கடந்து வந்த காரணத்தினால் விலங்கினத்தினுடைய பண்புகள் நமக்குள் மேலோங்கி இருக்கிறது. அவற்றை முறையான பயிற்சியோடு கூடிய முயற்சி நிச்சயமாக சீர்திருத்தம் செய்து விடும்.

♻️ *இன்றைய தற்சோதனை*

♻️ பிறந்தது முதற்கொண்டு இன்று வரை நம்முடைய உயிரும், உடலும் அப்படியே நிலையாக இல்லை. உடல் அனுக்களெல்லாம் வளர்கிறது. பல பருவங்களை சந்திக்கிறது. உயிர்துகள்கள் உடல் முழுவதும் ஓடி அதன் ஆற்றலுக்கு தக்கவாறு பிரபஞ்சத்தோடு கலந்து இவ்வுடலுக்குள் இயங்குகிறது. பலவகையிலும் இதன் இயக்கச் சிறப்பினை தற்சோதனை செய்து பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இதனுடைய உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். 

♻️ *இன்றைய பண்புப் பயிற்சி*

♻️ இறைநிலை முதல் நாம் வரை அனைத்துமே சரியான நீதியின்படி நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாம் எதிர்மறையாக சிந்தித்து செயல்படாத வரை நமக்கு இறைநிலையும், பஞ்சபூதங்களும், நவகோள்களும் நன்மையே செய்து கொண்டிருக்கும். மனிதர்களின் கருமையத்திற்கு ஒத்த பண்பில் உயர வேண்டும். அப்பண்புகள் நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர் நிறைஉணர்வு, மன்னிப்பு இவைகளே ஆகும். இவைகளை வளர்த்துக்கொண்டு வளமான ஞானம் வளர்ப்போம். வாழ்க வளமுடன்...

♻️ *இன்றைய மூலிகை*

♻️ *நீராவி பிடித்தல்* குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.

♻️ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும், 

♻️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♻️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♻️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments