♦️🔘♦️🔘♦️🔘♦️🔘♦️🔘♦️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 12*
♦️🔘♦️🔘♦️🔘♦️🔘♦️🔘♦️
☯️ *இன்றைய நித்தியகடன்*
☯️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
☯️ *இன்றைய சாதகம்*
☯️ செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
☯️ *இன்றைய நற்சிந்தனை*
☯️ பேரியக்க மண்டலமாகிய இந்த பிரபஞ்சத்தில், எந்த ஒரு இயக்கம் நடைபெற வேண்டுமானாலும், அதற்கு இறை நிலையின் துணை இல்லாமல் நடைபெற முடியாது. இறைநிலை துணை கொண்டுதான் இந்த பிரபஞ்ச இயக்கம் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றும், இன்றும், நாளையும் இது அப்படியேதான் தொடரும். இறைத்துகள் முதல் ஆறறிவு மனிதன் வரையில் இவை அனைத்துக்குள்ளும் நடக்கும் ரசாயன மாற்றங்கள், உணவு ஜீரணம், உடல் கழிவுப் பொருட்களின் உந்து சக்தி, எண்ண ஓட்டம் இவை அனைத்தும் இறைநிலையின் துணைகொண்டே நடைபெறுகிறது.
☯️ *இன்றைய தற்சோதனை*
☯️ இந்த இயக்கங்கள் அனைத்தையும் ஒவ்வொரு மனிதர்களும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். இது இறைவனைப் பற்றிய ஒரு தேடலாக நமக்குள் துவங்கி, அறிமுகமாகி முடிவில் நம்முடைய வரலாறாகவே நமக்கு தெளிவாக விளங்கும். இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம் என்பது நம்முடைய சொந்த கதை. இந்த கதை தெரியாமலும், புரியாமலும், தவறாக புரிந்து கொண்டும் வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களை மனிதர்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவைகளை முறையாக தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு தனி மனிதனுடைய பொறுப்பும் கடமையுமாகும்...
☯️ *இன்றைய பண்புப்பயிற்சி*
☯️ பிறந்தோம் இறந்தோம் என்ற நிலையில் இருந்தால், இந்த சரித்திர உண்மைகளை எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியாது. அதற்கென்று ஒரு முயற்சி, ஆக்கத் துறையில் நம்முடைய அறிவைச் செலுத்தி, ஊக்கமுடன் தன்னுடைய வாழ்க்கையில் கடமையாகவே இதையும் சேர்த்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இப்பண்பில் நம்மை முழுமையாக இணைத்து கொண்டால், இந்த பண்பின் வளர்ச்சி, முதிர்ச்சி, நம்முடைய உண்மை நிலை விளக்கம் நமக்கு கிடைத்துவிடும். அதற்காக துல்லியமாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது தான் மனவளக்கலை என்னும் வேதாத்திரியம். வாழ்க வளமுடன்...
☯️ *இன்றைய மூலிகை*
☯️ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
☯️ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
☯️ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
☯️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
☯️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
☯️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
☯️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment