🍒🎲🍒🎲🍒🎲🍒🎲🍒🎲🍒
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 11*
🍒🎲🍒🎲🍒🎲🍒🎲🍒🎲🍒
🏞️ *இன்றைய நித்தியகடன்*
🏞️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏞️ *இன்றைய சாதகம்*
🏞️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🏞️ *இன்றைய நற்சிந்தனை*
🏞️ நீர் அதனுடைய வழிப்பாதையில் எதனை எல்லாம் வருடிக்கொண்டு கடந்து செல்கிறதோ, எது மாதிரியான நிலப்பரப்பை கடக்கிறதோ, இது அத்தனையிலும் உள்ள வளங்களையெல்லாம் தனதாக்கிக்கொண்டு பயணம் செய்கிறது. காற்றும் அதேபோல்தான் எதையெல்லாம் வருடிக்கொண்டு ஒரு கண்டம் விட்டு இன்னொரு கண்டம் பயணம் செய்கிறது. அது அத்தனையும் அவைகளின் வளமாக தன்மாற்றம் பெறுகிறது. இது போல் தான் நாம் தவத்தில் எதையெல்லாம் அடைகிறோமோ, எந்த சக்தியோடு எல்லாம் நினைக்கிறோமோ, அதுவெல்லாம் அந்த நொடியில் அந்த தருணத்தில் நம்முடைய தாகவே அமைகிறது.
🏞️ *இன்றைய தற்சோதனை*
🏞️ இந்த இயற்கையினுடைய இயக்க நீதியை நன்றாக உணர்ந்து கொண்டு நமக்குள் இணைந்த சக்தியை தன்மையை நாம் நமதாக்கிக்கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ செயல்பட முனைய வேண்டும். நம்முடைய ஒழுங்கமைக்கப்பட்ட எண்ணம், சொல், செயல்களால் இந்த சக்தி மேலும், மேலும் மேன்மை பெறுகிறது. அதே சமயம் நம்முடைய ஒழுங்கமைக்கப்படாத எண்ணம், சொல், செயல்களால் இதே சக்தி விரயமாக்கப்படுகிறது. இந்த உண்மையை உணர்வதற்கு தற்சோதனையில் நம்மை எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது நம்மோடு எப்படி இணைந்து செயல்படுகிறது, அதனுடைய தரம் மாறாமல், தன்மை மாறாமல் எப்படி நம்முடைய அறிவோடு இணைத்துக்கொள்வது என்பதை விரிவான மனநிலையில் தெளிவாக தற்சோதனை செய்து உணர வேண்டும்.
🏞️ *இன்றைய பண்புப் பயிற்சி*
🏞️ இவ்வாறாக நமக்குள் இணைப்பு பெற்ற இயற்கையினுடைய ஆற்றலையும், சக்தியையும் வைராக்கியமான மனோநிலையில் நின்று நம்மை நாம் ஞானத்திற்கு உகந்த தன்மையோடும், தரத்தோடும் தகவமைத்துக் கொள்ளும் போதுதான் அந்த சிறப்பான ஆற்றலும் சக்தியும் நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும். நம்முள் இருந்து முழுமையாக அது தன்னை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து கொள்ளும். எவருக்கும் துன்பம் செய்யாமல் தானும் துன்பப்படாமல் வாழும் பண்பு ஒன்றுதான் இந்த சிறப்பான நிலைக்கு நம்மை உயர்த்த வல்லது. வாழ்க வளமுடன்...
🏞️ *இன்றைய மூலிகை*
🏞️ *வேப்பிலை* தேவையான பொருட்கள், வேப்பிலை 5, சின்ன வெங்காயம் 1, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும்.
🏞️ நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.
🏞️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏞️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏞️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏞️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment