⏺️🎱⏺️🎱⏺️🎱⏺️🎱⏺️🎱⏺️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 10*
⏺️🎱⏺️🎱⏺️🎱⏺️🎱⏺️🎱⏺️
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு நம் வாழ்க்கையில் நாம் செய்த பலவிதமான நல்ல செயல்களை, அடிக்கோடிட்டு காட்டக்கூடிய அளவிலும் முறையிலும் எடுத்துக்காட்டாக நாம் வாழ வேண்டும். நம்முடைய சந்ததிகள் நம்மைத்தான் பின் தொடர்வார்கள் என்பதை உணர்ந்து, பொறுப்போடும் கடமையோடும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 ஒவ்வொரு கணமும் தற்போது உள்ள சூழ்நிலையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நம்மை சுற்றி நடக்க கூடிய நிகழ்ச்சிகளில் நம்முடைய பங்களிப்பு எந்த அளவு இருக்கிறது, இருக்க வேண்டும் என்பதை துல்லியமாக கணக்கெடுத்து கண்காணிப்புடன் நாம் வாழவேண்டும். இந்த நுட்பமான செயல்களை எல்லாம் செய்வதற்கு நமக்கு மனப்பக்குவம் என்பது மிகவும் அவசியமாகிறது. இந்த மனவளக்கலை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வெறும் போதனை மார்க்கமாக உருவாக்கவில்லை. இது ஒரு சாதனை மார்க்கம்.
🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌀 ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்றும் நமக்கு நடக்கும், நடந்து கொண்டிருக்கும், நடக்கப்போகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் துல்லியமாக புரிந்து கொண்டு நம்மை சீர்திருத்திக்கொண்டு வாழ வைக்கக் கூடிய, மிக முக்கியமான பொறுப்பை மகரிஷி அவர்கள் ஏற்று இந்த பயிற்சி முறைகளை, அன்போடும் அருளோடும் வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள். இதில் நாள் தவறாமல் நம்மை இணைத்துக் கொண்டு, வாழ்வில் எல்லா வகையான வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுவோமாக வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌀 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment