🍥🚥🍥🚥🍥🚥🍥🚥🍥🚥🍥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 09*
🍥🚥🍥🚥🍥🚥🍥🚥🍥🚥🍥
🌈 *இன்றைய நித்தியகடன்*
🌈 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌈 *இன்றைய சாதகம்*
🌈 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌈 *இன்றைய நற்சிந்தனை*
🌈 வானவில்லின் வண்ணங்கள் ஏழு, நம் சரீரத்தில் ஆதார சக்கரங்கள் ஏழு, உணவு நம் உடலில் அடையும் தன்மாற்ற தாதுப் பொருள்கள் ஏழு, இந்த சூரிய குடும்பத்தில் உள்ள முக்கிய கோள்கள் ஏழு, வார நாட்கள் ஏழு இவை ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு கோட்பாட்டின் கீழ் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைகின்றன. அந்த கோட்பாடு தான் இயற்கை என்ற பெரும் இயக்க நீதி, இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
🌈 *இன்றைய தற்சோதனை*
🌈 அவைகளையெல்லாம் நாம் உணர்வதற்கு நாம் இன்னும் நமக்குள் ஆழமாக பயணிக்க வேண்டும். தவத்தில் சிறந்து ஓங்க வேண்டும். அப்போதுதான் அந்த உண்மைகள் நமக்குப் புலப்படும். நம் கண்களுக்கும், புலன்களுக்கும் எட்டாத ரகசியங்கள் கோடான கோடி இருக்கின்றன. அவைகளெல்லாம் நாம் மனதால் உணர வேண்டியவை. மனதை எந்த அளவுக்கு நாம் தற்சோதனையோடும், அயரா விழிப்பு நிலையோடும் வைத்திருக்கின்றோமோ அந்த அளவு அதன் ரகசியங்களையும் உண்மைகளையும் நம்மால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
🌈 *இன்றைய பண்புப் பயிற்சி*
🌈 நம்முடைய எண்ணத்தையும், வாழ்க்கை சூழ்நிலைகளையும் நீர்ப்பாதை போல அப்படியே விட்டு விடாமல், அலட்சியம் செய்யாமல் எப்போதும் ஆராய்ச்சியில் இருக்கக்கூடிய பண்பில் உயர வேண்டும். அப்போதுதான் நமக்குள்ளும் பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்கள் அனைத்தும் நம்மால், நம் மனதால், அறிவால் உணரப்படும். இதற்கு இப்போதே இந்த நொடியே தயாராவோம். "மனவளக்கலை" வேதாத்திரி மகரிஷியால் அதற்காகவே அருளப்பட்டிருக்கிறது, என்ற உண்மையை உணர்வோம். (பின்குறிப்பு:- ராகு, கேது கிரகங்கள் அல்ல அவை காந்த அலைகள்) வாழ்க வளமுடன்...
🌈 *இன்றைய மூலிகை*
🌈 *இஞ்சி+தேன்* தேவையான பொருள், இஞ்சி 4 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌈 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌈 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🌈 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌈 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌈 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌈 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment