🕸️✨🕸️✨🕸️✨🕸️✨🕸️✨🕸️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 06*
🕸️✨🕸️✨🕸️✨🕸️✨🕸️✨🕸️
🌏 *இன்றைய நித்தியகடன்*
🌏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌏 *இன்றைய சாதகம்*
🌏 புதன்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🌏 *இன்றைய நற்சிந்தனை*
🌏 நம்முடைய முன்னோர்கள் அனைவரும், இந்த பூமியில் பிறந்திருக்கும் ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்திற்கு பொறுப்போடும் அக்கறையோடும் நடந்துகொள்ளவேண்டும், என்பதை அடிக்கோடிட்டு வலியுறுத்தி அதை வாழ்க்கையாக வாழச் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானம் இருக்கிறது. எந்த ஒரு மனிதனும் சுயநலம் கொண்டு வாழக்கூடாது என்பதற்கும், பொது நலத்தோடு தான் வாழ வேண்டும் என்பதற்கும், ஆழமான காரணங்கள் இருக்கின்றன.
🌏 *இன்றைய தற்சோதனை*
🌏 பரந்து விரிந்த சிந்தனையோடும், பொதுநல செயல்பாடுகளோடும், ஒரு மனிதன் வாழும் போது அந்த மனிதனுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகிறது. பிரபஞ்ச சக்தியும், ஜீவகாந்த சக்தியும் ஒன்றிணைய கூடிய வாய்ப்புகள் உருவாகிறது. மூளை செல்கள் தன்னை பலப்படுத்திக் கொண்டு இந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக் கொள்கிறது. இவையெல்லாம் நடைபெற வேண்டுமானால் மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நீதி உருவாக்கப்பட்டது. அது அறநெறி வாழ்க்கையாக அமைந்தது. இவைகளை எல்லாம் நன்றாக தற்சோதனை செய்து பாருங்கள்.
🌏 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌏 புலன் இன்பங்களுக்குள்ளும், சிற்றின்பங்களுக்குள்ளும், தன்னை ஒரு மனிதன் எல்லை கட்டிய சிந்தனைகளோடும் ஒடுக்கிக் கொள்ளும் போதும் அவர் உடலில் நோய்களோடும், மனதில் குழப்பங்களோடும், வாழ்க்கையில் சிக்கல்களோடும் தன்னுடைய வாழ் நட்களை கழிப்பார்கள். இப்படி இருப்பவர்கள் வாழ்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை, மாறாக பிழைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் வேறுபாடு உண்டு. பொதுநல சிந்தனையோடு தன்னை நோய் எதிர்ப்புச் சக்தியோடு, எவரொருவர் தற்காத்துக் கொள்கிறாரோ அவரே இந்த பூமியில் வாழ்கிறார் என்று அர்த்தம். மனவளக்கலை பயிற்சிகள் நோய் எதிர்ப்பு சத்தியோடும் பொதுநல சிந்தனையோடும் உருவாக்கி வாழவைக்கிறது. வாழ்க வளமுடன்...
🌏 *இன்றைய மூலிகை*
🌏 *நீராவி பிடித்தல்*
🌏 குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
🌏 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும்,
🌏 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌏 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌏 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌏 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment