வேதாத்திரிய சிந்தனைகள் : "தேவைகளை முறைபடுத்துவோம்

வேதாத்திரிய சிந்தனைகள் : 

" தேவைகளை முறைபடுத்துவோம் "

தேவையுணர்வு, அறியாமை, பழக்கம் மூன்றாலே 
தீங்கு தரும் பல செயல்கள் நிகழக் காண்போம் ; 
தேவைகளை விஞ்ஞானம், இயந்திரங்கள் 
தீவிரமாய் தீர்த்து விடும் இந்தநாளில் 
தேவையற்ற பலவற்றைத் தேவையாக்கும்
தெளிவில்லாக் கற்பனைகள் சிந்தித்தால் போம் ;
தேவைகளை அளவு, முறை அறிந்து கொள்ளும் 
திறம் கல்வி போதனையில் அமைய வேண்டும்.-மகரிஷி 

மக்கள் அனைவரும் வாழ்வில் துன்பமற்ற இன்பத்தைதான்     
விரும்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன ?
இன்பத்தைக் காட்டிலும் துன்பமே அதிகமாக உள்ளது. 
காரணம் என்ன என்று சிந்திக்கும்போது சில உண்மைகள் 
புலனாகின்றன. தேவையினால் உண்டாகும் ஆசைகளை
நிறைவு செய்யும்போது அளவு முறை மீறுவதாலும்,
அறியாமையினால் செய்யும் செயல்களினாலும், தவறான
பழக்கங்களை வழக்கமாக மாற்றிக் கொள்வதாலும் மட்டும்
வாழ்வில் துன்பம் மிகுதிபடுகிறது. 
தேவைகளை நிறைவு செய்வதற்கு விஞ்ஞான சாதனங்களும்,
மின்னணு சாதனங்களும் பெருமளவில் உதவி செய்கின்றன.
தேவைகளை நிறைவு செய்யும் அதே நேரத்தில், தேவையற்ற 
பொருள்கள் மேல் எழும் விருப்பத்தையும் குறைத்துக்கொள்ள
வேண்டும். தவிர்க்க பழகிக் கொள்ளவேண்டும். இத்தைகைய
நற்பண்பை கல்விச்சாலைகளிலேயே போதிக்கவேண்டும்.
அறியாமையை போக்க அறிவை விழிப்பு நிலையில் இருத்தி
சிந்தித்துத் தெளிவுபெறுதல் வேண்டும். தவறான பழக்கங்களை
விடுத்து நற்குணங்களை பழக்கத்தில் கொள்ளவேண்டும்.
துன்பமற்ற இன்பமான வாழ்க்கை நம்மைத் தேடிவரும்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன் !

Comments