நித்தியகடன் செப்டம்பர் 28 2021

🐝🐌🐝🐌🐝🐌🐝🐌🐝🐌🐝

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 28*

🐝🐌🐝🐌🐝🐌🐝🐌🐝🐌🐝

🌌 *இன்றைய நித்தியகடன்*

🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌌 *இன்றைய சாதகம்*

🌌 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🌌 *இன்றைய நற்சிந்தனை*

🌌 இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவிதமான கருமையமும் தன்னகத்தே உள்ள, அனுபவப் பதிவுகளை காந்தத்தின் வழியாகத்தான் ஒன்றுக்கு ஒன்று பகிர்ந்து கொள்கிறது. இந்த பகிர்வியக்கமானது காந்தத்தின் ஊடாடும் இயக்கத்தின் வழியாக அமைந்து இயங்குகிறது. ஒரு பொருளில் உள்ள அனுபவ பதிவுகள் மற்றொன்றுக்கு பரிமாறிக்கொள்ளபடுகிறது. இது உயிருள்ள பொருளென்றும், உயிரற்ற பொருளென்றும் பாகுபாடு இல்லாமல் அனைத்து கருமையங்களுக்கும் பொதுவான இயக்க நீதியாகும்.

🌌 *இன்றைய தற்சோதனை*

🌌 இவைகளை நாம் கண்களால் பார்க்க முடியாது. இது போன்ற இயக்கங்கள் நம் உள்ளும் புறமும் பிரபஞ்ச வெளியிலும் நிரம்பி இருக்கின்றன. இவைகளையெல்லாம் நாம் அனுபவம் ஆக்கிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த அனுபவம் சகலவிதமான மனிதர்களுக்கும் பொதுவானதேயாகும். ஆனால் முறையாக பயிற்சி மேற்கொள்ளப் பட வேண்டும். பயிற்சியின் விளைவாகவே பலவிதமான மறைபொருள் அனுபவங்கள் முளைத் தெழுகின்றன.

🌌 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌌 திடீரென்று யாருக்கும் எந்த அனுபவமும் ஏற்பட்டு விடாது, படிப்படியாக முயற்சிக்க வேண்டும். மனவளக்கலை பயிற்சி முழுக்க முழுக்க காந்தத்தின் வழியாகவே, அனைத்து விதமான தன்மாற்ற அனுபவங்களும் அமைகின்றன. இது ஒரு காந்த வழி அனுபவப் பயணம். இதில் நம்மை நம்பிக்கையோடு ஆழமாக இணைத்துக்கொண்டு பண்பட்ட நிலையில், மனதை படிப்படியாக பக்குவப்படுத்திக் கொண்டே இருந்தோமேயானால் இறைஞானம் நிச்சயமாக அமையும். *"சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட சந்தேகம் சிக்கலின்றி சாட்சி கூறும் உன்னுளம்" வேதாத்திரி மகரிஷி* வாழ்க வளமுடன்...

🌌 *இன்றைய மூலிகை*

🌌 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🌌 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🌌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌌 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌌 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments