🔘🎨🔘🎨🔘🎨🔘🎨🔘🎨🔘
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 25*
🔘🎨🔘🎨🔘🎨🔘🎨🔘🎨🔘
🌈 *இன்றைய நித்தியகடன்*
🌈 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌈 *இன்றைய சாதகம்*
🌈 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌈 *இன்றைய நற்சிந்தனை*
🌈 ஒரு வண்ணத்தோடு இன்னொரு வண்ணம் சேரும்போது மூன்றாவதாக புதியதொரு வண்ணம் உருவாகும். உதாரணத்திற்கு மஞ்சள் நிறத்தையும் நீல நிறத்தையும் சேர்த்தால் பச்சை நிறம் கிடைக்கும். இது போன்றே ஒருவரோடு மற்றொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் போது புதியதாக இன்னொரு கருத்து உருவாகும். இரு வேறுபட்ட தன்மைகள் ஒன்றுபடும் போது அங்கு புதிதாக ஒரு தன்மை உருவெடுக்கும்.
🌈 *இன்றைய தற்சோதனை*
🌈 இயற்கையினுடைய இந்த நீதி சரியாக துல்லியமாகவே நடைபெறுகிறது. இந்த நீதி மனிதர்களுக்குள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்போம். நமக்குள்ளாக இருக்கக்கூடிய சீவகாந்தத்தின் அடர்த்திக்கும், தன்மைக்கும் ஏட்பவே நம்மீது மோதக்கூடிய வான்காந்த அலைகளும், பிறரது எண்ணஅலைகளும் நமக்குள் செயலாக்கம் பெறுகிறது. நம்முடைய கருமையம் தூய்மையாகவும், ஜீவகாந்தம் அடர்த்தியாகவும் இருக்கும் போது எந்தவிதமான எதிர்வினை இயக்கமும் நமக்குள் செயல்பட முடியாது. இயக்க கோட்பாட்டினை காந்த தத்துவப்புரிதலோடு தற்சோதனை செய்து பாருங்கள்.
🌈 *இன்றைய பண்புப் பயிற்சி*
🌈 நமக்கு நம்மீது மிகுந்த கவனம் தேவை எல்லா வகையிலும் உங்களை நீங்கள் கவனத்தோடு கண்காணியுங்கள். உங்கள் மீது மோதி, சிதறி, ஊடுருவி, பிரதிபலித்து, இரண்டுக்குமிடையே ஓடிக்கொண்டிருக்கும் காந்த அலைகளை, இந்த கண்காணிப்பு பண்பு இருந்தால் மட்டும் தான் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இயற்கையின், இறைவனின் தன்மாற்ற சரித்திரத்தையும், அதன் எல்லா வகையான இயக்க நீதியையும். நமக்கு தெளிவாக விளங்க வைக்கும். இந்த கண்காணிப்பு பண்பினை சிறப்பாக செயலாக்கப் படுத்தி வளமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌈 *இன்றைய மூலிகை*
🌈 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🌈 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🌈 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🌈 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🌈 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌈 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌈 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌈 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment