நித்தியகடன் செப்டம்பர் 19 2021

🎴🎲🎴🎲🎴🎲🎴🎲🎴🎲🎴

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 19*

🎴🎲🎴🎲🎴🎲🎴🎲🎴🎲🎴

🥟 *இன்றைய நித்தியகடன்*

🥟 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🥟 *இன்றைய சாதகம்*

🥟 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🥟 *இன்றைய நற்சிந்தனை*

🥟 அரிசியை ஊறவைத்து அரைக்கும்போது அது ஈரப் பதமான மாவாகும். அதே அரிசியை ஊறவைக்காமல் அரைத்தால் அதுவும் மாவாகும். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு, இரண்டினுடைய தன்மைகளும் வேறுபட்ட நிலையிலேயே காணப்படும். அவைகளை வைத்து எந்த ஒரு உணவை தயாரித்தாலும் அவைகளிலும் அந்த வேறுபாடு நிச்சயமாக உணர முடியும். இது போல மனதை இறைநிலையில் ஊறவைத்து வாழ்க்கையை வாழும் போது அதனுடைய தன்மை வேறாகும், இறைநிலையை உணராமல் வாழும் போது அதனுடைய தன்மை வேறாகும்.

🥟 *இன்றைய தற்சோதனை*

🥟 இறைநிலையை உணர்ந்து செயல்படும் மனதிற்கும், இறை நிலையை பற்றி உணராமல் செயல்படும் மனதிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. எண்ணத்தை சிந்தனையை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்வதில் இருந்து, தனக்குள்ளாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வது வரை அனைத்தும் மாறுபட்டும் வேறுபட்டும் காலம் எடுத்துக் கொண்டு, தற்சோதனை செய்து இறைநிலையோடு எண்ணத்தை கலக்கவிட்டு மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

🥟 *இன்றைய பண்புப் பயிற்சி*

🥟 மனதை புத்துணர்ச்சியோடும், பயிற்சி மீது நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும் தொடர்ந்து இருக்கக்கூடிய அன்பை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பண்பு இறைநிலையோடு நம்மை இணைக்கும் மிகச்சிறந்த பாலமாக அமையும். வாழ்க வளமுடன்...

🥟 *இன்றைய மூலிகை*

🥟 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🥟 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🥟 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🥟 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🥟 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🥟 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments