நித்தியகடன் செப்டம்பர் 16 2021

🥥🌽🥥🌽🥥🌽🥥🌽🥥🌽🥥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 16*

🥥🌽🥥🌽🥥🌽🥥🌽🥥🌽🥥

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 அன்பர்கள் நண்பர்கள் அனைவரும் கூடி நன்றி உணர்வுடன் நாம் இவ்வுணவை உண்ண துவங்குவோம் உடல்நலத்திற்கே. எண்ண விழிப்புடன், இவ்வுணவு அளவுடன் உச்சியில் நினைவை வைத்துக் கொள்வோம். உண்போம் இனிய நினைவோடு இவ்வுணவை உடல்நலம், ஆயுள், உயர் புகழ், அமைதி, இடமதன் தூய்மை எல்லாம் அமைக. இவ்வுணவு அளித்தோர் இறைவன் அருளால் எவ்வகையாலும் ஏற்றமாய் வாழ்க. எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுவோம்‌ நல்லதோர் உணவினை நமக்கே அளித்தோர் வாழ்க வளமுடன் உலக உயிர்களெல்லாம். வாழ்க! வாழ்க! வாழ்க வளமுடன். காயகற்ப கலை கற்றோர் அனைவரும் தூய மனதோடு பத்து தடவைகள் நரம்பூக்கம் எனும் நல்லதோர் பயிற்சியும், சிரம் வித்தேரி சிந்தனை உயர ஓஜஸ் மூச்சு ஓரிரு தடவைகள் தேஜஸ் உயர்ந்திட செய்தூண் உண்போம்.

         *வேதாத்திரி மகரிஷி
                ஞானமும் வாழ்வும்*

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 தினந்தோறும் உணவை உண்பதற்கு முன் உணவுப் பாடலையும், காயகற்ப பயிற்சியையும் செய்துவிட்டு உணவை உண்போம். இந்த உணவு பாடலில் மகரிஷி கொடுத்துள்ள வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து அதில் உள்ள விஞ்ஞானத்தை புரிந்து கொள்வோம். இவ்வாறாக செய்யும் போது ஏற்படக்கூடிய விளைவுகளை கூர்ந்து கவனியுங்கள். மனதிற்கும், உடலிற்கும், உயிருக்கும் இது எவ்வாறெல்லாம் நன்மைகளை தருகிறது, பயன்படுகிறது, என்பதை தற்சோதனை செய்யுங்கள். விளக்கத்தோடு வாழ்க்கையை விரிவாக வாழ்வோம்.

🍁 *இன்றைய பண்புப் பயிற்சி*

🍁 நாள் தவறாமல் ஒவ்வொரு வேளை உணவுக்கு முன் உணவு பாடலை சொல்லிவிட்டு, காயகல்ப பயிற்சியையும் செய்யும், பண்பை வளர்த்துக்கொண்டு இதற்குள் இருக்கும் செயல் விளைவையும், இதனை ஆசான் எதற்காக அன்போடு அருளினார்கள் என்பதையும் உணர்ந்து கொள்வோம். இந்த சிறப்பான பண்பைபில் உயர்ந்து உலக மக்களோடு இதனை பகிர்ந்து கொண்டு வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🍁 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments