நித்தியகடன் செப்டம்பர் 15 2021

💢🌀💢🌀💢🌀💢🌀💢🌀💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 15*

💢🌀💢🌀💢🌀💢🌀💢🌀💢

🏮 *இன்றைய நித்தியகடன்*

🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🏮 *இன்றைய சாதகம்*

🏮 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
🏮 *இன்றைய நற்சிந்தனை*

🏮 எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையையும் நாம் மனோதைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும். இந்த தைரியமும், நெஞ்சுரமும், நல்லதொரு பயிற்சியின் வழிகாட்டுதலும் நம்மிடையே இருக்கும்போது நாம் இவ்வுலகில் எதைக் கண்டும் அஞ்ச தேவையில்லை. துல்லிய நெஞ்சத் துணிவோடு வாழ்க்கைமுறையை நாம் கற்று இருக்கிறோம். இது நமக்கு முழுமையான வெற்றிக்கு உண்டான வழிமுறையாகும். இத்தனை சிறப்புகளை வைத்துக்கொண்டு நாம் எதைக் கண்டும் பயம் கொள்ள தேவையில்லை.

🏮 *இன்றைய தற்சோதனை*

🏮 எப்படி வேண்டுமானாலும் நம்முடைய சூழ்நிலைகள் அமையலாம். இவைகளை எல்லாம் நாம் நல்ல முறையில், எந்தவிதமான சிரமங்களையும் சமாளித்து, ஆக்கத்துறையில் எப்போதும் ஊக்கமுடன் உழைத்து முன்னேறும் வைராக்கியத்தை வளர்த்துக் கொள்வோம். இந்த இடத்தில் உழைப்பு என்பதை பொருள் ஈட்டுவதற்காக என்று மட்டும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. நல்ல ஆற்றலை சேகரித்து கொள்வதும், அதற்கான செயல்களில் ஈடுபடுவதும் ஒருவகையான உழைப்பேயாகும்.

🏮 *இன்றைய பண்புப்பயிற்சி*

🏮 இன்றைய உலக வாழ்க்கையில் நமக்கு பெரிதும் தேவையாக இருப்பதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நோய் எதிர்ப்பு சக்திக்காக மனோதைரியத்தோடும் விடாமுயற்சியோடும் உழைக்க தவறி விடக்கூடாது. இந்த இடத்தில் உழைப்பு என்பது உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த உழைப்பை செலுத்தி நமக்கான ஆற்றலை பெருக்கிக் கொள்வோம். மனோதைரியத்தை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் அஞ்சா நெஞ்சத்தோடு உழைப்போம் உயர்வோம். வாழ்க வளமுடன்...

🏮 *இன்றைய மூலிகை*

🏮 சின்ன வெங்காயம் 1, வேப்பிலை 5, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும். 

🏮 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.

🏮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🏮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🏮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🏮 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments