நித்தியகடன் ஆகஸ்ட் 30 2021

🌷🌴🌷🌴🌷🌴🌷🌴🌷🌴🌷

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 30*

🌷🌴🌷🌴🌷🌴🌷🌴🌷🌴🌷

🌟 *இன்றைய நித்தியகடன்*

🌟 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌟 *இன்றைய சாதகம்*

🌟 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🌟 *இன்றைய நற்சிந்தனை*

🌟 உடலிலுள்ள எல்லா மையங்களிலும் மனதை சுலபமாக கவனித்து இயக்கும் பழக்கத்தில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். நினைத்த மாத்திரத்தில் கவனத்தை குவித்து ஆழ்ந்து செல்லக்கூடிய, மனதை ஒருமுகப்படுத்த கூடிய இப்பயிற்சி முறையில் அனைவரும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு சிரமமாக இருக்கிறது என்றால், சரியான முறையில் நீங்கள் தற்சோதனை பயிற்சிகளில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என்று அர்த்தம்.

🌟 *இன்றைய தற்சோதனை*

🌟 உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை என்ற பலமான அஸ்திவாரத்தின் மேல்தான் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சி வெற்றி பெறும். இந்த நான்கு விதமான பயிற்சி முறைகளும் நடைமுறையில் இல்லாதபோது மனதை ஒருமுகப்படுத்துவது என்பது, ஒரு கனவாகவும் கற்பனையாகவும் தான் இருக்கும். முறையான முயற்சி நம்மை முழுமைப்பேருக்கு அழைத்துச் செல்லும். குறுக்கு வழியில் ஞானத்தில் வெற்றி பெறுதல் என்பது இயலாத காரியம்.

🌟 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌟 நம்முடைய முந்தைய பிறவிகள் அனைத்தும் விலங்கினங்களாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து இப்போது இந்த ஆறாவது அறிவு கொண்ட மனிதப் பிறப்பு அமைந்திருக்கிறது. இந்த மனிதப் பிறவியானது ஞானவழி இவ்வழியில் வாழ்வதற்காகவே உருவானதாகும். இப்பிறவிக்கு ஒத்த செயல்களால் மட்டும்தான் வெற்றி பெறுவோமே தவிர திசைமாறிய, முறைபிறழ்ந்த செயல்களால் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லாத ஒன்று. ஞானம் என்பது நன்னடத்தை, உண்மை இவைகளின் அம்சமாகும். இதனை உணர்ந்து வாழ்வோருக்கு ஞானம் நிச்சயமாக சித்திக்கும். வாழ்க வளமுடன்...

🌟 *இன்றைய மூலிகை*

🌟 *இஞ்சி + சின்ன வெங்காயம் + நீராவி பிடித்தல்*

🌟 இஞ்சி 15 கிராம் 
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்

🌟 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.

🌟 சின்ன வெங்காயம் 15 கிராம் 
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்

🌟 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும். 

🌟 நீராவி பிடித்தல்:- 
குடிநீர் 1,1/2 லிட்டர்
நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.

🌟 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், சின்ன வெங்காயம் சாறும்,மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.

🌟 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌟 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌟 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌟 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments