நித்தியகடன் ஆகஸ்ட் 27 2021

🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 27*

🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥

🎭 *இன்றைய நித்தியகடன்*

🎭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎭 *இன்றைய சாதகம்*

🎭 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🎭 *இன்றைய நற்சிந்தனை*

🎭 பொதுவாக நம் உள்ளும் புறமும் உள்ள உண்மையை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் உங்களுக்குள் சிக்கல்களும், பிரச்சனைகளும் நிரந்தரமாக தங்கி விட்டது என்றே பொருள். உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு துணிவு வேண்டும் அந்த மனோதைரியம் இருந்தால் மட்டும்தான் நமக்குள்ளாக நாம் உண்மைக்கு இடம் கொடுப்போம். உள்ளதை உணர்ந்து அல்லது தவிர்த்து நல்லதை செய்து வர உண்மை நமக்குள் உயர்வு பெறும். உண்மை அல்லாத விஷயங்கள் நமக்குள்ளே புழக்கத்தில் இருக்கும் போது உண்மைக்கு இடம் நம்மிடம் இல்லை.

🎭 *இன்றைய தற்சோதனை*

🎭 எல்லா சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் பார்க்கிறீர்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் உங்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கிறது நீங்கள் அதனை எந்த முறையில் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை பற்றி விரிவான சிந்தனையோடு ஆராய்ச்சியோடு உங்கள் வாழ்க்கை சூழ்நிலைகளை ஏற்றுக் கொண்டு முடிவெடுங்கள். தன்னை தானே எவரொருவர் ஆய்வுக்கு உட்படுத்தி கொள்கிறாரோ அவரால் மட்டும்தான் உண்மையாக வாழ முடியும், வேதாத்திரியத்தை ஏற்றுக்கொள்ள முடியும், தற்சோதனைக்கு பின் தான் வேதாத்திரியம் சாத்தியம். அதுவரையில் அதில் நடைமுறை சிக்கல் இருப்பதாகவே உணர்வீர்கள்.

🎭 *இன்றைய பண்புப் பயிற்சி*

🎭 நம்மிடம் இருக்கக்கூடிய போலியும் பொய்யான முகமும் களையப்படாத வரை. பொய் நம்மை பிரம்மாண்டமாக ஆட்சி செய்யும். சுயநலம் பாராது எப்போது நாம் சிந்திக்கவும், செயல்படவும் துணிகின்றோமோ, அப்போது நமக்கு உண்மையை ஏற்றுக் கொள்ள எந்த ஒரு தயக்கமும் இருக்காது. இந்த சுயநல சிந்தனையும் போக்கும் தான் நம்மை நம்மிடமிருந்து பிரித்து விட்டது என்ற உண்மையை உணர்வோம். நாம் உண்மையினுடைய அம்சம் உண்மையாகத் தான் வாழவேண்டும். உண்மையை ஏற்றுக்கொண்டு அதனோடு இணைந்து வாழ்வில் உயர்வோம், மெய்யுணர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...

🎭 *இன்றைய மூலிகை*

🎭 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🎭 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🎭 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🎭 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎭 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎭 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments