🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 26*
🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️
🕷️ *இன்றைய நித்தியகடன்*
🕷️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕷️ *இன்றைய சாதகம்*
🕷️ வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🕷️ *இன்றைய நற்சிந்தனை*
🕷️ சமூக வலைதளங்கள் உலக மக்களை ஒரு மாயைக்குள் அழைத்துச் செல்கிறது. எனக்கென்று ஒரு உலகம், என் நாடு, என் மக்கள் என்று மயக்கநிலையில், மன போதையில் எப்போதும் இயங்கச் செய்து விடுகிறது. பாவம் அவர்களுக்கே தெரியாது அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டார்கள் என்று. மிகுந்த கவனத்தோடு இருப்பவர்கள் இந்த சமூக வலைதளத்தின் மாயைக்குள் சிக்குவதில்லை. தன்னைத்தானே ஆய்வுக்கு உட்படுத்தி கொள்பவர்களையும் சிந்தனையாளர்களையும் இந்த வலை தளம் ஒன்றும் செய்ய முடிவதில்லை.
🕷️ *இன்றைய தற்சோதனை*
🕷️ பெரும்பாலும் இதில் சிக்கிக் கொள்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த மயக்க நிலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, அதில் மூழ்கி தன்னை இழந்து விடுகிறார்கள். தன்னை இழந்த செய்தியை அவர்கள் உணர்வதற்குள்ளாக அவர்களை அதல பாதாளத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறது, சூது நிறைந்த மாயைக்குள் பிறர்மனதூண்டுதலால் முழுமையாக கபளீகரம் செய்யப்பட்டு விடுகிறது.
🕷️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🕷️ நம்மை சுற்றி நிறைய இது போன்ற மாயைகள் இருக்கின்றன. எப்போது எது நம்மை தாக்கும் என்றே தெரியாது. எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நம்மை அவைகள் தாக்குவதற்கு தயாராக இருக்கிறது. இந்த தாக்குதல்களை எல்லாம் நாம் எதிர்கொண்டு, நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மனப்பக்குவம் இருந்தால் மட்டும் தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். அதற்கான சிறப்பான பயிற்சி முறை தான் மனவளக் கலையாகும். இந்நாளும் எந்நாளும் நன்னாளாக மனவளக்கலை பயிற்சியை நாள் தவறாமல் செய்து வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🕷️ *இன்றைய மூலிகை*
🕷️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🕷️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🕷️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🕷️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🕷️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🕷️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment