நித்தியகடன் ஆகஸ்ட் 22 2021

🏮❄️🏮❄️🏮❄️🏮❄️🏮❄️🏮

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 22*

🏮❄️🏮❄️🏮❄️🏮❄️🏮❄️🏮

🌿 *இன்றைய நித்தியகடன்*

🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌿 *இன்றைய சாதகம்*

🌿 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🌿 *இன்றைய நற்சிந்தனை*

🌿 புலன்களின் பால் ஈர்க்கப்பட்டு மயக்க உணர்ச்சி மிகுதியின் காரணமாக, நாம் நம்முடைய நிலையை மறந்து உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எடுக்கும் முடிவுகள், சுயநலம் மிக்கதாகவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் தூண்டுதலாகவும், மற்றவர்களுடைய நலனை பெரிதாக எண்ணிப் பார்க்காமல் தனக்காகவும், தன்னுடைய தேவைக்காகவும் நியாயமற்ற முறைகளில் அவைகளை நிறைவேற்றிக்கொள்ள தூண்டும். பெரும்பாலும் இந்நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

🌿 *இன்றைய தற்சோதனை*

🌿 உணர்வுபூர்வமாக வைராக்கியத்தோடு எடுக்கும் முடிவுகள் ஆராய்ச்சியோடு சிந்தித்து எடுக்கப்பட்டதாகவும், பொதுநலமுடையதாகவும், மற்றவர்களுக்கும், எல்லா வழிமுறைகளிலும் நலம் தருவதாகவும், அவைகளை செயல்படுத்தும்போது சில பல இடர்பாடுகள் வந்தாலும் அவைகளை நியாயமான முறையில் தவிர்க்க முயற்சி செய்வோம். பிறரைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சிந்தித்து வைராக்கியத்தோடு எடுக்கப்படும் முடிவுகள் தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.

🌿 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌿 காலநிலை மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நம்மை திசை திருப்ப முயற்சி செய்யலாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அமையலாம். இவைகளை எல்லாம் தாண்டி தன்னை முழு மனிதனாக தனக்குள் நிலைநிறுத்திக் கொண்டும் உயர்த்திக் கொண்டும் பயிற்சி முறைகளால் மேலும் மேலும் முயற்சிகளை மேற்கொண்டும் உணர்வுபூர்வமாக வைராக்கித்தோடு வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

🌿 *இன்றைய மூலிகை*

🌿 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🌿 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🌿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌿 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments