♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 21*
♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️
📊 *இன்றைய நித்தியகடன்*
📊 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
📊 *இன்றைய சாதகம்*
📊 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
📊 *இன்றைய நற்சிந்தனை*
📊 பொதுவாக நான்கு விதமான பருவ காலங்கள் உண்டு அவை மழை, காற்று, வெயில், பனி இந்த பருவகாலங்களின் மாறுதல்களுக்கு ஏற்ப நம் உடலில் பல விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன இந்த ரசாயன மாற்றங்களை நம் உடல் தாங்கும் சக்தியோடு இருக்கும்போது நாம் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறோம். இந்த ரசாயன மாற்றத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாதபோது அது நோயாக உணரப்படுகிறது.
📊 *இன்றைய தற்சோதனை*
📊 உடலுக்கு வெளியே நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளுக்கு உடலுக்குள் ஏற்படுகின்ற மாற்றங்கள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது அறிவோடும், ஆற்றலோடும் திறமைகளை வெளிப்படுத்தும் போது வாழ்க்கையின் சூழல்கள் மாற்றம் பெறுகின்றன நம்மோடு நெருக்கமாக இருக்கும் நண்பர்களோடும் உறவுகளோடும் பழகும்போது நம்முடைய மனப்பக்குவம் சிறப்பாக வெளிப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளோடு நம்மை முழுமையாக இணைத்துக் கொள்ளும்போது துன்பம் இல்லாத வாழ்க்கையை வாழ முடிகிறது.
📊 *இன்றைய பண்புப் பயிற்சி*
📊 எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு எல்லோரோடும் இணக்கமாக வாழக்கூடிய பண்பில் உயர வேண்டும். இந்த உயர்வு நம்முடைய பலவிதமான துன்பங்களையும், மன சிக்கல்களையும், உடல் நோய்களையும் போக்கும்படியாக அமைகிறது. புற சுழலுக்கும், ஆக ஆளுமைக்கும் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றோடும் இணக்கமாக வாழும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்...
📊 *இன்றைய மூலிகை*
📊 சின்ன வெங்காயம் 1, வேப்பிலை 5, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும்.
📊 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.
📊 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
📊 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
📊 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
📊 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment