நித்தியகடன் ஆகஸ்ட் 19 2021

❄️🚥❄️🚥❄️🚥❄️🚥❄️🚥❄️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 19*

❄️🚥❄️🚥❄️🚥❄️🚥❄️🚥❄️

🏮 *இன்றைய நித்தியகடன்*

🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🏮 *இன்றைய சாதகம்*

🏮 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🏮 *இன்றைய நற்சிந்தனை*

🏮 உங்களால் பிறருக்கு என்னவோ அதுவேதான் பிறரால் உங்களுக்கு, "தீதும் நன்றும் பிறர் தர வாரா" நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நம் கருமையத்தினுடைய தன்மையே மூலகாரணம். இதனை தெளிவாக உணர்ந்து கொண்டு, புரிந்து கொண்டு அந்த கருமையத்தினுடைய தன்மையை மாற்றி அமைப்பதற்கு உண்டான மனவளக்கலை பயிற்சிகளை நாள் தவறாமல் செய்து பயன் காண்போமாக.

🏮 *இன்றைய தற்சோதனை*

🏮 நம்முடைய கருமையத்தில் நல்வினை பதிவுமுண்டு, தீவினை பதிவுமுண்டு, நல்வினை பதிவை அதிகரித்துக் கொள்வதற்கு தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, அவரவர்கள் எண்ணம், சொல், செயல் வழியாக துன்பவினைப் பதிவு ஏற்படுத்தாமல் கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த வழி முறையை கடைபிடித்தால் இயல்பாகவே தீவினை பதிவினுடைய வலிமை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். தற்சோதனை செய்துமனதை விழிப்பு நிலையில் நிலைக்கவைத்து விட்டால் இதனை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

🏮 *இன்றைய பண்புப் பயிற்சி*

🏮 எல்லாமும் காலத்துக்குள் அடங்கியது. காலத்தை மீறி இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே கிடையாது. குறிப்பிட்ட காலம் வரை சில நிகழ்வுகள் இருக்கும். அவைகள் ஏன்? எதனால்? எப்படி? என்று ஆராய்ச்சியோடு சிந்தித்து உணர்ந்து புரிந்து கொள்ளுங்கள். இந்த சிந்தித்து உணரும் பண்பில் உங்களுடைய எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. "எதையும் வெளியே தேடாதீர்கள்" உங்களுக் குள்ளாகவே உங்களுக்கு தேவையான அனைத்தும் முழுமையாக இருக்கிறது முறையாக முயற்சித்து பயன்படுத்தி பயன் காண்போம். வாழ்க வளமுடன்...

🏮 *இன்றைய மூலிகை*

🏮 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🏮 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🏮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🏮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🏮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🏮 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments