💢💠💢💠💢💠💢💠💢💠💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 18*
💢💠💢💠💢💠💢💠💢💠💢
🔥 *இன்றைய நித்தியகடன்*
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 *இன்றைய சாதகம்*
🔥 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔥 *இன்றைய நற்சிந்தனை*
🔥 கால அவகாசம் முடிவதற்குள் Recharge செய்து கொள்ளவும். உடலுக்கும், உயிருக்கும், மனதிற்கும் அவ்வப்போது Recharge (சீவகாந்த பெருக்கம்) செய்து கொள்ள வேண்டும். Recharge செய்வதினுடைய அவசியமும் தேவையும் என்ன? நமக்கும் நட்புகளுக்கும் இடையே, நமக்கும் உறவுகளுக்கும் இடையே, நமக்கும் கோள்களுக்கும் இடையே, நமக்கும் சமுதாயத்திற்கும் இடையே Recharge செய்வது இனிமையான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமும் தேவையும் ஆகும். இந்த தேவையை எவரொருவரும் அலட்சியம் செய்யாமல், உதாசீனப்படுத்தாமல் கவனமாக இருந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
🔥 *இன்றைய தற்சோதனை*
🔥 காலாவதியாகி உங்கள் கணக்கை முடக்குவதற்குள் Recharge செய்து கொள்ளவும். மேலே சொல்லப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும், நம்முடைய வாழ்க்கை நலனுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ஜீவகாந்தம் எனும் ஆற்றலை பயிற்சியின் மூலம் நம்முடைய எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் சரியான முறையில் நடத்துவதற்கும் நமக்குள்ளாக புதைந்து கிடக்கின்ற பிழைகளை எல்லாம் அகற்றி கொள்வதற்கும் ஜீவகாந்த பெருக்கம் (Recharge) ஒன்றே தீர்வாகும்.
🔥 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔥 உடலை இயக்குவதற்காகவும், புலன்களை இயக்குவதற்காகவும், நடந்து முடிந்தவைகளை, நடக்க வேண்டியவைகளை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்பதற்காகவும் நம்முடைய ஜீவகாந்தம் செலவாகிக் கொண்டே இருக்கிறது. இவை அனைத்திலும் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் நம்முடைய ஜீவகாந்தத்தை எந்தவகையிலும் செலவழித்து விடக்கூடாது. இப்பண்பில் அனைவரும் உயர வேண்டும். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்த இயக்கமும், தேர்ச்சியும், வளர்ச்சியும் ஜீவகாந்த்தையை சார்ந்து உள்ளது. வாழ்க வளமுடன்...
🔥 *இன்றைய மூலிகை*
🔥 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🔥 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🔥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment