நித்தியகடன் ஆகஸ்ட் 16 2021

🏮📊🏮📊🏮📊🏮📊🏮📊🏮

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 16*

🏮📊🏮📊🏮📊🏮📊🏮📊🏮

🗻 *இன்றைய நித்தியகடன்*

🗻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🗻 *இன்றைய சாதகம்*

🗻 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🗻 *இன்றைய நற்சிந்தனை*

🗻 எந்த ஒரு பிழையிலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும் என்று எண்ணினால், அதற்கு எல்லா வகையிலும் அதற்கென சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்வதில் துவங்கி நிற்பது, நடப்பது, எண்ணுவது, உண்பது, உறங்குவது என அனைத்திலும். நூறு சதவீத முயற்சியை, பங்களிப்பை செய்தாக வேண்டும். எல்லா சமய சந்தர்ப்பங்களிலும் அயரா விழிப்பு நிலையோடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

🗻 *இன்றைய தற்சோதனை*

🗻 ஒரு பிழைக்கு நம் மனதில் ஒரு சதவீதம் இடம் கொடுத்து விட்டால் போதும், அது படிப்படியாக நமக்கே தெரியாமல் நம்மை 100% குறைந்த கால அவகாசத்தில் நம்மை முழுமையாக கபளீகரம் செய்து விடும். சிறிது காலங்கள் கழித்து பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் நம் வாழ்க்கை பலவிதமான கேள்விக் குறிகளாலும், ஆச்சரியக் குறிகளாலும் நிரப்பப்பட்டிருக்கும். ஆங்காங்கு வெறுமையும் காணப்படும் மேலும் தன்னந்தனியாக இந்த இடத்திற்கு நான் எப்படி வந்தேன்? என்ற சந்தேகத்தோடு நின்று கொண்டு இருப்போம்.

🗻 *இன்றைய பண்புப்பயிற்சி*

🗻 ஒரு துளி நஞ்சு போதுமானது ஒரு குடம் பாலை நஞ்சாக மாற்றுவதற்கு. ஆனால் ஒரு துளி நஞ்சு புனிதம் அடைய செய்ய வேண்டுமானால் பல குடம் பால் தேவை. தவறுகளை செய்துவிட்டு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது அறிவுடமை ஆகாது. தவறுகளையும் நன்மைகளையும் சரியாக புரிந்துகொண்டு, நன்மையாகவே வாழ்வதுதான் ஆன்மீக அறிவின் மேம்பாடும் மனிதனுடைய ஆறாவது அறிவின் சிறப்புமாகும். வாழ்க வளமுடன்...

🗻 *இன்றைய மூலிகை*

🗻 *இஞ்சி + சின்ன வெங்காயம் + நீராவி பிடித்தல்*

🗻 இஞ்சி 15 கிராம் 
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்

🗻 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.

🗻 சின்ன வெங்காயம் 15 கிராம் 
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்

🗻 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும். 

🗻 நீராவி பிடித்தல்:- 
குடிநீர் 1,1/2 லிட்டர்
நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.

🗻 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், சின்ன வெங்காயம் சாறும்,மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.

🗻 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🗻 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🗻 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🗻 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments