நித்தியகடன் ஆகஸ்ட் 15 2021

💦🚥💦🚥💦🚥💦🚥💦🚥💦

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 15*

💦🚥💦🚥💦🚥💦🚥💦🚥💦

💥 *இன்றைய நித்தியகடன்*

💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

💥 *இன்றைய சாதகம்*

💥 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
💥 *இன்றைய நற்சிந்தனை*

💥 தங்களுடைய தேவைகளை முறைப் படுத்திக் கொள்ளாமல் வாழும் தம்பதியர்களுக்கு, பிறக்கும் குழந்தைகள் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு, தேவையில்லாததையெல்லாம் தேவையாகிக் கொள்வார்கள். இதன் விளைவாக வாழ்க்கையில் சிக்கல்களையும், துன்பங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் நகல் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இதனை மறந்து செயல்படும்போது பிள்ளைகள் செய்கின்ற தவறுகளுக்கு அவர்கள் மீதே குற்றம் சொல்கிறோம். இது எந்த வகையில் ஞாயம்.

💥 *இன்றைய தற்சோதனை*

💥 ஒழுக்க நெறியோடு வாழ்வதற்கு தன்னை தானே எப்போதும் ஆர்வத்தோடு முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆர்வமும், சீர்திருத்தமும் தான் நாமும் நம் குடும்பமும், நலமும் வளமும் பெறுவதற்கான ஒரே வழி தடமாகும். இதை மறந்தாலோ, அல்லது மறுத்தாலோ துன்பம் வேறு யாருக்கோ அல்ல நமக்கே தான் என்பதை தற்சோதனை செய்து முழுமையாக புரிந்து கொள்வோம்.

💥 *இன்றைய பண்புப் பயிற்சி*

💥 உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு நாம் எப்போதும் எங்கேயும் தயங்க கூடாது. அப்படி தயங்கும்போது நம்முடைய வாழ்க்கையை நாம் இழக்க நேரிடுகிறது. உண்மை என்பது யாருக்காகவும், எப்போதும் தன்னை மாற்றிக் கொள்ளாத பூரணமான ஒன்று. உண்மைக்காக நாம் தான் நம்மை சீர்திருத்தங்களுக்கு ஆழ்த்திக் கொள்ள வேண்டும். உண்மையை பேசி, பழகி வாழும் பண்பில் ஒவ்வொரு நாளும் உயர்வோம். ஒவ்வொரு நாளும் அதற்கெனவே பயிற்சி செய்வோம் நம்முடைய அடுத்த சந்ததியினரும் வாழ உதவி செய்வோம். வாழ்க வளமுடன்...

💥 *இன்றைய மூலிகை*

💥 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

💥 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

💥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments