நித்தியகடன் ஆகஸ்ட் 12 2021

♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 12*

♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️

❄️ *இன்றைய நித்தியகடன்*

❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

❄️ *இன்றைய சாதகம்*

❄️ வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
❄️ *இன்றைய நற்சிந்தனை*

❄️ காலச் சக்கரமும் வாழ்க்கை சக்கரமும் எப்படி சுழல்கிறது? இவ்விரண்டின் இயக்கங்களுக்கு மத்தியில் தான் மனித வாழ்க்கையே தீர்மானிக்கப் படுகிறது. அப்படியானால் இந்த இரண்டு விதமான கோட்பாடுகளையும், அமைப்பையும் சரியாக புரிந்து கொண்டோமேயானால், நாம் நம்முடைய வாழ்க்கையில் எந்த குழப்பமும் இல்லாமல் சிக்கலும் இல்லாமல் வாழ முடியும். இவ்விரண்டு சக்கரத்தின் அமைப்பு ஒன்றுக்கு ஒன்று மிகச் சரியாக பொருந்த வேண்டும். அதற்கு அதனுடைய கோட்பாடை, விதியை புரிந்துகொள்ள மனிதர்களுக்கு மனப்பக்குவம் தேவை.

❄️ *இன்றைய தற்சோதனை*

❄️ காலச்சக்கரத்தையும் கோள்களையும் கோள்களின் அலை இயக்க அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. வாழ்க்கை சக்கரம் மனிதனுடைய கருமையத்தில் உள்ள வினைப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. வினைப் பதிவுகளுக்கும் கோள்களின் அலை இயக்கத்திற்கும் இணக்கமான சூழ்நிலை அமைந்தால் அது நல்ல நேரம் என்று உணரப்படுகிறது. அதே சமயம் இணக்கமான சூழ்நிலை இல்லை என்றால் அது கெட்ட நேரம் என்று உணரப்படுகிறது. இந்த முரண்பாடுகளை கண்டறிந்த தத்துவ ஞானிகள் வேதாத்திரி மகரிஷியும், அவரை போன்ற பல ஞானிகளும், மகான்களும் கருமைத்தை தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி முறைகளை வகுத்துக் கொடுத்துள்ளார்.

❄️ *இன்றைய பண்புப்பயிற்சி*

❄️ பயிற்சியை தினந்தோறும் செய்துகொண்டு நம்முடைய எண்ணம், சொல், செயல் இவைகளை ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் உபயோகப்படுத்தி இயற்கைக்கு முரண்படாமல், வாழ்வை வாழும்போது நமக்கு எல்லா நேரமும் நல்ல நேரமாகவே அமையும். விலங்கின பதிவுகள் கருமையத்தில் இருக்கும்வரை பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராட்டம் என்பது இருந்துகொண்டே தான் இருக்கும். ஆக விலங்கின பதிவுகளை போக்கிக் கொண்டு ஆறாவது அறிவில் முழுமை பெறுவோம். வாழ்க வளமுடன்...

❄️ *இன்றைய மூலிகை*

❄️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

❄️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

❄️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

❄️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

❄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

❄️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments