🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 09*
🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️
♾️ *இன்றைய நித்தியகடன்*
♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♾️ *இன்றைய சாதகம்*
♾️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
♾️ *இன்றைய நற்சிந்தனை*
♾️ பூக்கள் தன் வாசனையால் தேனீக்களை கவர்கிறது. இந்த தேனீகள் தேனை சுவைப்பதற்காக பூக்களை நாடி வருகிறது. இதில் இருக்கும் மகரந்தம் இடம்பெயர்ந்து, விதைகளாக தங்களை உருவாக்கிக் கொள்கிறது. மகரந்த சேர்க்கை இயற்கையினுடைய நிகழ்ச்சி. இதற்கு தேனீக்கள் தேவைப்படுகிறது. தேனீக்களை கவர்வதற்கு பூக்களுக்கு வாசனை தேவைப்படுகிறது. ஒன்றினுடைய தேவையிலிருந்து இன்னொன்றுனுடைய வாழ்க்கை துவங்குகிறது. இந்த அழகான இயற்கை அமைப்பை உங்களுக்குள்ளும் சமுதாயத்திற்குள்ளும் ஆய்வு செய்யுங்கள்.
♾️ *இன்றைய தற்சோதனை*
♾️ உங்களுடைய தேவை மற்றொருவர் மூலமாக நிறைவேறும் மற்றவருடைய தேவை உங்கள் மூலமாக நிறைவேறும் இதுதான் இயற்கையின் சட்டமாகவும் நீதியாகவும் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உதவியும் ஒத்தாசையுமாகவே வாழ்வது மனித வாழ்க்கையின் மிகச்சிறந்த தன்மையை உருவாக்கும். இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம்.இந்த அடிப்படை சட்டத்தை எல்லா வகையிலும் தற்சோதனை செய்து பாருங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு.
♾️ *இன்றைய பண்புப் பயிற்சி*
♾️ ஒன்றை ஒன்று அரவணைத்தும், காத்தும், இணைத்துக்கொண்டு சிறப்பாக உருவாகியிருக்கும் இந்தப் பிரபஞ்சம், இந்த பிரபஞ்சத்தின் அத்தனை நிகழ்ச்சியையும் உணர்வதற்காகவே வந்த இனம், மனித இனம் ஆகும். தான் யார் என்று புரிந்து கொண்டு தன்னுடைய மூலத்தை உணர்ந்து கொள்வதே மனிதப் பிறப்புக்கு உண்டான சிறப்பு அமைப்பாகும். இதில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி முறையே மனவளக்கலை.இந்த பயிற்சியை நாள் தவறாமல் செய்யும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
♾️ *இன்றைய மூலிகை*
♾️ *இஞ்சி + சின்ன வெங்காயம் + நீராவி பிடித்தல்*
♾️ இஞ்சி 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
♾️ செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
♾️ சின்ன வெங்காயம் 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
♾️ செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
♾️ நீராவி பிடித்தல்:-
குடிநீர் 1,1/2 லிட்டர்
நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
♾️ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், சின்ன வெங்காயம் சாறும்,மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
♾️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
♾️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
♾️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
♾️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment