🚥🔮🚥🔮🚥🔮🚥🔮🚥🔮🚥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 08*
🚥🔮🚥🔮🚥🔮🚥🔮🚥🔮🚥
🍥 *இன்றைய நித்தியகடன்*
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 *இன்றைய சாதகம்*
🍥 இன்று ஞாயிற்றுக்கிழமை அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🍥 *இன்றைய நற்சிந்தனை*
🍥 மனதிற்கு இயல்பான சில பண்புகள் உண்டு. எதன் பின்னாவது இந்த மனம் சென்றுகொண்டே இருக்கும். நாம் எதனை பின் தொடர்கிறோம் என்றெல்லாம் அதற்கு சிந்திக்கத் தெரியாது. மனதை நாம் முறையாக வழிநடத்த தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு மனிதர்களையும் சார்ந்ததாகும். இதற்கு முதலில் நாம் நம்மை தயார் படுத்த வேண்டும். நம்மை இதற்கு தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.
🍥 *இன்றைய தற்சோதனை*
🍥 மனம் ஏன் எதன்பின்னாவது சென்று கொண்டே இருக்கிறது? மனம் என்பது உயிரினுடைய படர்க்கை நிலை. உயிர் தான் மனதிற்கு மூலம், மனம் உயிரை தேடுகிறது. மனம் தன்னுடைய மூலத்தை உணர்ந்து கொள்ள வேண்டும், என்ற தன்னார்வமே இதற்கு காரணம். குண்டலினி யோகப் பயிற்சியில் ஈடுபடும் ஒருவரால் தான் இந்த உயிருக்குள் ஒடுங்கும், உயிரை உணரும் வாய்ப்பை மனதிற்கு வழங்க முடியும். இப்பயிற்சியில் முன்னேற்றம் காணக்காண மனதினுடைய புலன் இயக்க தன்மைகள் அனைத்தும் படிப்படியாக குறைந்து மனம் அமைதி நிலையை எய்துகிறது...
🍥 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍥 நல்வினை பதிவும், தீவினை பதிவும் நம்மை வழிநடத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நல்வினை பதிவு நம்மை வழி நடத்தும் போது நாம் நல்ல பல செயல்களை சமுதாயத்தில் செய்கிறோம். அது தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் இல்லாத வகையில் வாழ்க்கையை வாழ்வோம். தீயவினைப் பதிவு நம்மை வழி நடத்தும் போது நாம் தேவையற்ற சிக்கல்களை உடலில், மனதில், வாழ்க்கையில் உருவாக்கிக் கொள்வோம். ஆக விழிப்பு நிலையோடு இருந்து மனதை உயிரில் ஒடிக்கி, அறிவில் மலரச் செய்து தவ வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்...
🍥 *இன்றைய மூலிகை*
🍥 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🍥 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🍥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment