நித்தியகடன் ஆகஸ்ட் 07 2021

🍁🌍🍁🌍🍁🌍🍁🌍🍁🌍🍁

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 07*

🍁🌍🍁🌍🍁🌍🍁🌍🍁🌍🍁

🌿 *இன்றைய நித்தியகடன்*

🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌿 *இன்றைய சாதகம்*

🌿 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🌿 *இன்றைய நற்சிந்தனை*

🌿 பூமியின் மேற்பரப்பில் உள்ள விதைகளையும், பூமியின் அடிப்பரப்பில் உள்ள கனிமவளங்களையும் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் நகர்த்துகிறது. புயலையும், தென்றலையும், மழையையும், வெள்ளத்தையும், பூகம்பத்தையும் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சி இப் பூமியில் நடைபெறுகிறது. இவ்வாறாக நடைபெறும் இயற்கையின் அமைப்பை, நாம் நம் வாழ்வியலோடு ஒப்பிட்டு அதன் உண்மையை உணர வேண்டும். எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாக இருந்து பயன்படும் இயற்கை வளம், இது மனிதனுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது. இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு.

🌿 *இன்றைய தற்சோதனை*

🌿 தான், தனது என்று உங்களுடைய எண்ணத்தை சுருக்கிக்கொண்டால் அளவிட முடியாத திறமையையும், அறிவையும் உடைய மனித இனம், தன்னை இந்த சிற்றறிவில் புதைத்துக் கொண்டு தன்னை இழந்து விட்டது. இந்த இழப்பு உடலிலே நோய், உள்ளத்திலே களங்கம், வாழ்க்கையில் சிக்கல் என்ற ஒழுங்கற்ற தன்மையாக மலர்கிறது. 

🌿 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌿 பொய், சூது, களவு, கற்பழிப்பு, கொலை இந்த ஒழுங்கற்ற பண்பிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொண்டு சீரான ஞான பண்பில் உயர வேண்டும். நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமஉணர்வு, மன்னிப்பு இதுவே மனிதன் வாழ வேண்டிய பண்பாகும்,இதுவே ஞானநிலையுமாகும். வாழ்க வளமுடன்...

🌿 *இன்றைய மூலிகை*

🌿 *கருஞ்சீரகம்* தேவையான பொருள் கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

🌿 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

🌿 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

🌿 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, 
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

🌿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌿 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments