💢🌿💢🌿💢🌿💢🌿💢🌿💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*செப்டம்பர் 01*
💢🌿💢🌿💢🌿💢🌿💢🌿💢
🔷 *இன்றைய நித்தியகடன்*
🔷 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔷 *இன்றைய சாதகம்*
🔷 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔷 *இன்றைய நற்சிந்தனை*
🔷 மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தன்மையும், தரமும், திறமும் இருக்கிறது. இதனுடைய அடிப்படையில் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவை அனைத்திலும் அவர் அவர்களுக்கு அனுபவங்கள் வேறுபடும். ஒரு செயல் எல்லோருக்கும் ஒரே விதமான அனுபவத்தை கொடுக்குமா? என்றால் இல்லை. நிச்சயமாக மாறுபடத்தான் செய்யும்.
🔷 *இன்றைய தற்சோதனை*
🔷 இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள், நோக்கம் திறமை, கருவமைப்பு தன்மை இவைகள் மாறுவதால் செயலுக்குத் தக்க விளைவு என்பது பல்வேறு வகையாக அமைகிறது. ஒரே மாதிரியான விளைவுகள் உருவாவது இல்லை. அது விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் பொருந்தும். வைராக்கியத்தோடு தற்சோதனை செய்து இந்த எதார்த்த உண்மைகளோடு இணைவோம்.
🔷 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔷 எதுவெல்லாம் என்னுடையது என்று எண்ணுகின்றோமோ, அது எதுவுமே நம்முடையது அல்ல. அனைத்து அனுபவங்களும் அனுபவங்களாக வருவதும் இறைநிலையின் தன்மாற்றமே. இறைவனே எல்லாமுமாக மாறி இருக்கும் போது, இது என்னுடையது என்று சிந்திக்க எதுவுமே இல்லை. இந்த விரிவான மனோநிலையையும் பண்பையும் எளிதாக சிந்தித்து உணர்ந்து கொள்ளும் வாழ்க்கையே ஞான வாழ்க்கையாகும். வாழ்க வளமுடன்...
🔷 *இன்றைய மூலிகை*
🔷 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🔷 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🔷 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔷 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔷 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔷 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment