நித்தியகடன் ஜூலை 31 2021

☣️💠☣️💠☣️💠☣️💠☣️💠☣️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜூலை 31*

☣️💠☣️💠☣️💠☣️💠☣️💠☣️

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றை நாம் கவனிக்கத் தவறிவிட்டோமென்றால், அதன் விளைவாக நாம் பெறவேண்டிய நன்மைகளையும் தவற விட்டு விடுவோம், என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும். உடல் நலத்திற்கான செயல் முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளை கவனிக்க வேண்டும். மனவளத்திற்கான செயல் முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளை கவனிக்க வேண்டும். இவை அனைத்தும் தன்னார்வத்தோடும், உயிருணர்வோடும் கடைபிடிக்கும் போது, இதன் விளைவாக வேறு ஒரு தளத்திற்கு நாம் செல்வோம் அது என்னவென்றால்...

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 அறிவு ஆட்சி தரமுயரும், அறிவின் குறைபாடுகள் அனைத்தும் படிப்படியாக களையப்படும், உடல் நலமும் மனவளமும் ஒருங்கிணைந்து அமையப் பெற்ற மனிதனுக்குள் நல்லாட்சி தன்மை ஓங்கும், குறைவில்லாத ஜீவகாந்தம், குறைவில்லாத உயிரியக்கம் இவைகள் தான் அறிவாச்சி தரத்தின் பின்புலமாக இருப்பவைகள். இவைகளை முறையாக உயர்த்திக்கொள்ள சரியான பயிற்சி வேண்டும். அப்பயிற்சியை விடாமுயற்சியோடு கடைபிடிக்க வேண்டும்.

🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍁 அவ்வாறாக நமக்கு அமைந்த சிறப்பான பயிற்சி முறைதான் வேதாத்திரியம் (உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை). இப்பயிற்சியின் விளைவுகள் அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக சிந்தித்து புரிந்து கொண்டு, எந்த வித மயக்க உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல், பயிற்சிகள் அனைத்தையும் நாள் தவறாமல் அளவுமுறை மீறாமல் கடைபிடிக்கும், ஒவ்வொரு கருமையத்திற்குள்ளும் கட்டாயம் ஞான விளைவு உதயமாகும். வாழ்க வளமுடன்...

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

🍁 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

🍁 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

🍁 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, 
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments