☣️🔷☣️🔷☣️🔷☣️🔷☣️🔷☣️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜூலை 28*
☣️🔷☣️🔷☣️🔷☣️🔷☣️🔷☣️
🔮 *இன்றைய நித்தியகடன்*
🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔮 *இன்றைய சாதகம்*
🔮 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔮 *இன்றைய நற்சிந்தனை*
🔮 எப்போதும் தவம் செய்வதற்கு ஒரே இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் அதே நேரத்தில், அதே இடத்தில் அமர்ந்து தவம் செய்ய வேண்டும். இது போன்று ஒரே இடத்தையும், நேரத்தையும் தேர்வு செய்து தவம் செய்யும் போது அந்த இடத்திற்கு அந்த நேரத்தில் காந்தசக்தி குவிய துவங்கிவிடும். இந்த இயற்கையினுடைய நீதியை ஆய்வு செய்து அதனை உணர்வதற்கான ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு, அதனையும் ஆய்வு செய்து இதனுடைய விஞ்ஞானத்தை உணர்ந்து கொள்வோம்.
🔮 *இன்றைய தற்சோதனை*
🔮 சரியான நேரத்தில், சரியான இடத்தில் நாம் தவம் செய்து செய்து பழகி விட்டோமானால் அதே நேரத்தில், அதே இடத்தில் அங்கு காந்த சக்தியானது இயல்பாகவே குவிய தொடங்கி விடும். மன அலைச்சுழல் வேகம் குறைந்த நிலையில் நின்று இந்த இயற்கையினுடைய அற்புதமான கோட்பாட்டினை நீதியை சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய மன அலைச் சுழலை நீங்கள் தற்சோதனை செய்து, உங்களுடைய தேவைகளை முறைப் படுத்திக் கொண்டு சீர் செய்த முறையில் நீங்கள் விழிப்பு நிலையோடு இருக்கும்போது, இந்த இடத்தில் அந்த நேரத்தில் நடைபெறக்கூடிய காந்த இயக்கத்தை உணர முடியும்.
🔮 *இன்றைய பண்புப் பயிற்சி*
🔮 தற்சோதனை உங்களை உங்களுக்குள் கடத்திச் சென்று இறைநிலையோடு கலக்கச் செய்யும் அற்புதமான பாலமாகும். நாம் எண்ணுவதும், செய்வதும், பேசுவதும் வாழ்க்கையாக இருக்கிறது, இதுவே பண்பாடகவும் அமைகிறது. எண்ணம், சொல், செயல் இவற்றில் சாதகபாதகமில்லாமல் சிந்தித்து உயரவேண்டியது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்புமாகும். நாம் இந்த கடமையில் உயர்வோம் நம்முடைய அடுத்த சந்ததிக்கு இவைகளை சொத்தாக வழங்கி மகிழ்வோம். வாழ்க வளமுடன்...
🔮 *இன்றைய மூலிகை*
🔮 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🔮 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🔮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔮 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment