நித்தியகடன் ஜூலை 26 2021

⚙️💠⚙️💠⚙️💠⚙️💠⚙️💠⚙️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜூலை 26*

⚙️💠⚙️💠⚙️💠⚙️💠⚙️💠⚙️

🌿 *இன்றைய நித்தியகடன்*

🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌿 *இன்றைய சாதகம்*

🌿 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🌿 *இன்றைய நற்சிந்தனை*

🌿 கருமையம் ஒரு காந்தக் களம் எல்லாவிதமான ரகசியங்களும், அனுபவங்களும் இங்கேதான் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களுடைய கருமையம் இந்த பூமியினுடைய கருமையத்தோடும், இந்த பூமியினுடைய கருமையம் சூரியனோடும், இந்த சூரியகுடும்பத்தினுடைய கருமையம் இந்த பிரபஞ்சத்தினுடைய கருமையத்தோடும் என அனைத்து கருமையங்களுக்குள்ளும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இயங்குகிறது. அதன் அனைத்து ரகசியங்களும் அனுபவங்களும் இருப்பாக அனைத்துக் கருமையங்களுக்குள்ளும் இருக்கிறது. அவைகளை முறையாக திறந்து உணர்ந்து கொள்ளும் பக்குவமான பயிற்சி மட்டுமே தேவை.

🌿 *இன்றைய தற்சோதனை*

🌿 உயிர்காந்தம், வான்காந்தம் கோள்களில் இருந்து வரும் காந்தம்,பஞ்சபூதங்களில் இருந்து எழும் காந்தம் என காந்தம் பல்வேறு வகைப்படும். எல்லா காந்தமும் ஒரே காந்தம் கிடையாது. பல்வேறுபட்ட தன்மைகளை உடையது. இந்த அனைத்து வகையான காந்தத்திற்குள்ளும் ஊடுருவி நின்று ஆராயத்தக்க சிறப்பு மனிதர்களுக்குள் நிறைவாகவே அமைந்துள்ளது. ஜீவகாந்தத்தை அனைத்து வகையான காந்தத்தோடும் இணைத்து இயக்கி பழகி தற்சோதனை செய்து விளக்கம் பெறுவோம், நம் சிறப்பை உணர்வோம்.

🌿 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌿 ஒரு நாள் இரு நாளில் இது சாத்தியம் கிடையாது. பலநாள் பலமான வைரக்கியத்தோடு முயற்சி செய்தால்தான் இது சாத்தியமாகும். தனிமனித ஒழுக்கமும் ஐவகையான கடமைகளையும் சரியாக செய்துவரும் கருமையமே இதற்கு தகுதியான கருமையமாகும். தகுதியை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களுக்குள்ளேயே இருப்பாக இருக்கிறது. ஒழுக்கத்தால் இந்த பிரபஞ்சத்தையே கட்டி ஆள முடியும். வெற்றி வாய்ப்பாக வேதாத்திரியம் இருக்கிறது வாழ்க வளமுடன்...

🌿 *இன்றைய மூலிகை*

🌿 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🌿 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🌿 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🌿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌿 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments