👣🌷👣🌷👣🌷👣🌷👣🌷👣
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜூலை 24*
👣🌷👣🌷👣🌷👣🌷👣🌷👣
🍚 *இன்றைய நித்தியகடன்*
🍚 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍚 *இன்றைய சாதகம்*
🍚 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🍚 *இன்றைய நற்சிந்தனை*
🍚 சர்க்கரையை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி தண்ணீருக்குள் போட்டால் சர்க்கரை எவ்வளவு நேரம் ஆனாலும் ஒருபோதும் அது கரைய போவது கிடையாது. இது போலத்தான் நம் உயிர் மீது படிமங்கள் இருக்கிறது (விலங்கினப் பதிவு) இந்த படிமங்கள் இருக்கும் வரை இறைநிலையோடு உயிர் ஒன்றி கலப்பதற்கு வாய்ப்பே இல்லை இந்த விலங்கினப் பதிவாகிய தீவினைப் பதிவையும், நல்வினை பதிவையும் நன்றாக தற்சோதனை செய்து தன்நிறைவு காணவேண்டும்.
🍚 *இன்றைய தற்சோதனை*
🍚 உயிர் மீது இருக்கும் இந்த படிமத்தை எப்படித்தான் போக்கிக் கொள்வது என்றால் வேறு ஒன்றுமல்ல நீங்கள் எந்த அளவிற்கு தற்சோதனை செய்து உங்களை பண்பாளராக மாற்றி கொள்கிறீர்களோ அந்த அளவு உயிரின் மீது இருக்கக்கூடிய இந்த படிமங்களை கரைந்து கொண்டே வரும் மேலும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் முயற்சிக்குதக்க வெற்றி நிச்சயம் உண்டு.
🍚 *இன்றைய பண்புப் பயிற்சி*
🍚 நாம் நம்மை மதிக்கும் பண்பில் உயரவேண்டும் மனிதனாக நாம் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் நம்முடைய மனசாட்சியை மதித்து வாழ்வதே ஆகும். நம்மை ஒரு நாளும் தவறான மனிதனாக அடையாளப்படுத்தி விடக்கூடாது. நம் மனசாட்சியே நமக்குள்ளாக இருக்கும் தெய்வநிலையாகும் இந்த உண்மையை உணர்ந்து மனசாட்சியோடு நிறைவாக வாழ்வோம். எப்போதும், எங்கேயும், எல்லா வகையிலும் மனசாட்சியை கொன்றுவிடாமல் உயிரோடு வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🍚 *இன்றைய மூலிகை*
🍚 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🍚 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🍚 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🍚 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🍚 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍚 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍚 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍚 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment