நித்தியகடன் ஜூலை 23 2021

🔥♻️🔥♻️🔥♻️🔥♻️🔥♻️🔥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜூலை 23*

🔥♻️🔥♻️🔥♻️🔥♻️🔥♻️🔥

⏺️ *இன்றைய நித்தியகடன்*

⏺️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

⏺️ *இன்றைய சாதகம்*

⏺️ வெள்ளிக்கிழமை இன்று பௌர்ணமி காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
 
⏺️ *இன்றைய நற்சிந்தனை*

⏺️ உங்களுடைய நெருக்கமான வட்டத்தில் உள்ள நண்பர்கள் உறவினர்கள் என இவர்கள் அனைவரின் வார்த்தைகளை கேட்காமல் நான் முடிவெடித்தது சரிதான் என்று நீங்கள் எண்ணும் போதும் உங்களையும் அறியாமல் உங்கள் வாயிலிருந்து அசுத்தமான வார்த்தைகள் வருகிறது என்றாலும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நம்முடைய நேரம் நமக்கு சாதகமாக இல்லை நமக்கு நேர் எதிராக நம் முடைய காலச்சக்கரம் செயல் புரியப் போகிறது என்று அர்த்தம் கோள்களின் அலை இயக்கத்திற்கும் நம் கருமையத்திற்குமான உறவு, நட்பு நன்மை தரும் வகையில் இல்லை என்று பொருள்.

⏺️ *இன்றைய தற்சோதனை*

⏺️ இயற்கையின் மறுக்கமுடியாத ஒரு உண்மை இந்த உண்மை எப்போது நடைமுறைக்கு வரும் என்று யாராலும் கணித்து சொல்லிவிட முடியாது. அவரவருடைய கர்ம வினை அமைப்பிற்கும் கருமைய தன்மைக்கும் ஏற்ப இந்த ஏற்றத்தாழ்வான அமைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் ஆக நாம் மிகுந்த கவனத்தோடு விழிப்பு நிலையோடு இருக்க வேண்டும். எந்திரத்தனமான இன்றைய வாழ்க்கை சூழ்நிலைகளையில் எப்படி நீங்கள் விழிப்பு நிலையோடு எப்போதும் இருக்க முடியும் இதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது அது என்னவென்றால்.

⏺️ *இன்றைய பண்புப்பயிற்சி*

⏺️ நாள் தவறாமல் உடற்பயிற்சி காயகல்பம் தவம் தற்சோதனை இலைகளை செய்து உடல் உயிர் மனம் இவைகளை பக்குவப்பட்ட நிலையில் எப்போதும் பழக செய்துவிட்டோமே யானால் இந்த பயிற்சி முறையானது நம்மை எப்போதும் விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும். மேலும் கருமையத்திலும் வான் காந்தக் களத்திலும் நல்வினை பதிவுகளை அதிகமாக பதிவு செய்யச் செய்ய நம் வாழ்வில் நடக்கவிருக்கும் இன்னல்கள் இடர்பாடுகள் இன்பதுன்ப அமைப்புகள் அனைத்தையும் நம்மால் நடப்பதற்கு முன்னதாக உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய உள்ளுணர்வு நிலைக்கு நம்மை உயர்த்திக் கொண்டு. நம்மை சார்ந்தவர்களும் உயர நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வோமாக. வாழ்க வளமுடன்...

⏺️ *இன்றைய மூலிகை*

⏺️ *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

⏺️ செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

⏺️ *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

⏺️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

⏺️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

⏺️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

⏺️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments