🍀🏮🍀🏮🍀🏮🍀🏮🍀🏮🍀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜூலை 22*
🍀🏮🍀🏮🍀🏮🍀🏮🍀🏮🍀
🕳️ *இன்றைய நித்தியகடன்*
🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕳️ *இன்றைய சாதகம்*
🕳️ வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🕳️ *இன்றைய நற்சிந்தனை*
🕳️ தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கோ, அல்லது வேறு நாட்டிற்கோ செல்ல வேண்டுமானால் தரை வழியாக, ஆகாயம் வழியாக, கப்பலை பயன்படுத்தி தண்ணீர் வழியாகவும் செல்லலாம். இந்த பூமி 25,000 மைல் சுற்றளவு உடையது அதைவிட பல கோடி மயில் பயணப்பட வேண்டும் உயிருக்குள் இறைவனை நேக்கி. அப்போதுதான் இறையுணர்வு அனுபவமாய் கிட்டும்.
🕳️ *இன்றைய தற்சோதனை*
🕳️ இந்த பூமியில் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற முடியும். அதுபோல உயிருக்குள் பயணிப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். நாள் தவறாமல் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை செய்து உங்களை நாளுக்கு நாள் உயர்த்திக் கொள்ளுங்கள். எப்படியெல்லாம் பயணிக்க வேண்டும் என்று உங்களுக்கே உங்களுடைய அனுபவமாகவே இறைவன் உணர்த்துவான்.
🕳️ *இன்றைய பண்புப் பயிற்சி*
🕳️ பலவகையான கற்பனைகள் நமக்குள் இருக்கிறது இந்த கற்பனை எல்லாம் விட்டுவிட்டு எதார்த்தமாக வாழும் வாழ்க்கை முறைக்கு உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் எதார்த்தமான முறையில் வாழும் பண்பில் தான் இறைநிலையோடு இணையும் தகுதி உயர்வு பெறுகிறது. இறை உணர்வு பெறுவதற்காகவே இந்த மனிதப்பிறவி அமைந்துள்ளது. என்ற சிந்தனையில் இருந்து விலகாமல் எதார்த்தமாக வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🕳️ *இன்றைய மூலிகை*
🕳️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🕳️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🕳️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🕳️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🕳️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🕳️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment