வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியகடன்
ஜூலை 20
♨️♾️♨️♾️♨️♾️♨️♾️♨️♾️♨️
🌀 இன்றைய நித்தியகடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 ஓஜஸ் ஆற்றல் (சுத்த சக்தி) இது மனதோடு தொடர்புடைய ஆற்றலாகும். இந்த ஓஜஸ் ஆற்றலை நாம் காயகல்ப பயிற்சி செய்வதன் மூலமாக நமக்குள் பெருக்கி கொள்ள முடிகிறது. இந்த ஓஜஸ் ஆற்றல் தான் ஒவ்வொரு அனுவின் ஆதார சக்தியாகவும், நம் உடல் சக்தியாகவும், பிரபஞ்ச சக்தியாகவும் இருக்கிறது. அவ்வளவு வலிமையும் ஆற்றலும் மிக்க ஓஜஸ் ஆற்றலை காயகல்ப பயிற்சி மூலமாக நாம் பெருக்கிக் கொள்கிறோம்.
🌀 இன்றைய தற்சோதனை
🌀 மனதை எதன் மீது செலுத்துகிறோமோ மனம் அதுவாக மாறும், மனதை எங்கே செலுத்துகிறோமோ அங்கே காந்த சக்தியும் குவியும், இது இயற்கையின் இறைநீதி. இந்த நீதியின் அடிப்படையில் மனதை முழுமையாக மூலாதாரத்தில் வைத்து அஸ்வினி முத்திரை செய்யும்போது (ectoplasm) ஓஜஸ் ஆற்றல் நமக்குள் பெருகுகிறது. இதை மனம் ஒன்றி செய்தால் முழு பலனையும் நம்மால் பெறமுடியும். காயகல்ப பயிற்சியில் மூலாதாரத்தில் எது குவிகிறது, அது எப்படி உடல் முழுவதும் பரவுகிறது என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் மனதை ஆய்வுக்கு உட்படுத்தி கொண்டு உண்மையை உணர முயற்சி செய்யுங்கள்.
🌀 இன்றைய பண்புப் பயிற்சி
🌀 எந்த ஒன்றினுடைய நுட்பமான நிலையை உணர்ந்து கொள்ளக்கூடிய தன்னார்வமும், முயற்சியும், ஆராய்ச்சியும் தேவை. புலன்களுக்கு புலப்படாத ஒன்றை புலன்களைக் கடந்து தான் புரிந்துகொள்ள, அனுபவம் ஆக்கிக் கொள்ள முடியும். இது என்ன? என்று நீங்கள் ஆராய்ச்சியோடு சிந்திக்கும் போதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அந்த நிலையும் உங்களுக்கு புலப்படும். தன்னைத்தானே உங்களிடத்தில் அறிமுகமும் செய்து கொள்ளும். இதை ஒருநாளும் ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள். இந்த முயற்சியும், தன்னார்வமும், ஆராய்ச்சியும் நம்மை முழுமையான நிலைக்கு உயர்த்தும், இத்தகைய சிறப்புமிக்க தன்னார்வம் எனும் பண்பை வளர்த்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்...
🌀 இன்றைய மூலிகை
🌀 சின்ன வெங்காயம் 1, வேப்பிலை 5, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும்.
🌀 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.
🌀 ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.
🌀 குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment