நித்தியகடன் ஜூலை 18 2021

 https://youtu.be/pR-YPhuxb6I


வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியகடன்

ஜூலை 18


🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐


🍯 இன்றைய நித்தியகடன்


🍯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🍯 இன்றைய சாதகம்


🍯 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

🍯 இன்றைய நற்சிந்தனை


🍯 இந்த உலகத்திலேயே மிகவும் சிறப்புமிக்கது உணவாகவும், மருந்தாகவும் இருக்கிறது. அது பூக்களில் இருந்து எடுக்கப்படும் தேன். தேனீக்கள் மூலமாக எல்லாவகையான பூக்களிலிருந்து சேகரிக்கக் கூடிய தேன் மிகச்சிறந்த மருந்தாகும். கலப்படமில்லாத தேன் போல மிகச் சிறந்த மருந்து எதுவும் இல்லை.


🍯 இன்றைய தற்சோதனை


🍯 இந்த தேனை போல நம் உடலில் இருக்கக்கூடிய சீவ வித்துக் குழம்பும் மிகச்சிறந்த பொருளாகும். இதனை ஜீவகாந்தத்தைக் கொண்டு செரிவூட்ட செரிவூட்ட இந்த பிரபஞ்ச நிலைகள் அனைத்தையும், சிந்தித்து உணர்ந்து அனுபவமாக்கிக் கொள்ள நமக்குள் இருக்கும் அற்புதமான பொருள் சீவ வித்துக் குழம்பு.


🍯 இன்றைய பண்புப் பயிற்சி


🍯 ஐந்தில் அளவு முறை காக்கப்படும் போது நம் உடலில் சீவகாந்தம் திணிவு பெறுகிறது, உயிர் துகள்களில் அது சேகரிக்கப்படுகிறது. இது உயிர்த் துகள்களின் ஆற்றலையும், திறனையும் அதிகரிக்கிறது. சீவ வித்துக் குழம்பை தூய்மைசெய்து மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் பெற்று பிரம்ம நிலையை அனுபவம் ஆக்கிக்கொள்வோம். தூய்மை என்னும் பண்பில் எல்லா வகையிலும் சிறந்து விளங்குவோம். 

வாழ்க வளமுடன்...


🍯 இன்றைய மூலிகை


🍯 துளசி தேவையான பொருட்கள்

துளசி இலை – 1/2 கப்

தண்ணீர் – 2 கப்

டீத்தூள் – 2 டீஸ்பூன்

நாட்டு சர்கரை – தேவையான அளவு


🍯 செய்முறை

துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.

பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.


🍯 ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.


🍯 குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍯 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🍯 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments