நித்தியகடன் ஜூலை 15 2021

 https://youtu.be/oU4qcZHArHo


வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியகடன்

ஜூலை 15


⛰️🏮⛰️🏮⛰️🏮⛰️🏮⛰️🏮⛰️


💥 இன்றைய நித்தியகடன்


💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💥 இன்றைய சாதகம்


💥 வியாழக்கிழமை 

காலை:- துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்..

 

💥 இன்றைய நற்சிந்தனை


💥 நம்முடைய வாழ்க்கை என்பது மனவளக்கலை மூலமாக உடலை, மனதை, உயிரை முழுமை படுவதே ஆகும். நமக்குள்ளாக இருக்கும் கற்பனைகள் அகற்றிக் கொண்டு அறிவின் மூலம் முழுமையாக வாழ்வதே ஆகும். உடலில் ஏற்படக்கூடிய பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு ஏற்ப மனம் பலவிதமான எதிர்விளைவுகளை சந்திக்கிறது. உடலால் மனதிற்கும், மனதால் உடலிற்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும், நன்மையும் நடைபெறுகிறது, தீமையும் நடைபெறுகிறது. நம்முடைய முதுகுதண்டின் வழியாக பஞ்சபூதங்களின் சீரியக்க அமைப்பாலும், நல்ல எண்ணங்களாலும் நல்ல செயல்களாலும் அணு அடுக்குகள் பல படுத்தப் படுகின்றன. அதே சமயம் தீய எண்ணங்கள் தீய செயல்களால் அணு அடுக்குகளை சிதைக்கப் படுகின்றன.


💥 இன்றைய தற்சோதனை


💥 இந்த அணு சிதைவையும் அணு சேர்க்கையையும், நம்முடைய உடலில் மிக சரியாக பராமரித்து பாதுகாத்துக் கொண்டிருப்பது நம் உடலில் முக்கிய உறுப்பான மூளை. மூளை செல்கள் இயங்குவதிலும், பருவுடலை இயங்க செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. வலது பக்க மூளை விஞ்ஞான வளர்ச்சியிலும் அவ்வறிவை தூண்டுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இடது பக்க மூளை மெய்ஞான வளர்ச்சியிலும் அவ்வறிவை தூண்டுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இவைகளை நன்கு தற்சோதனை செய்து தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.


💥 இன்றைய பண்புப்பயிற்சி


💥 விஞ்ஞான அறிவு சார்ந்த செயல்பாடுகளையும், எண்ணங்களையும், மெய்ஞான அறிவு சார்ந்த செயல்பாடுகளையும் எண்ணங்களையும், தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய அபரிமிதமான கற்பனையால் உண்மையான விஞ்ஞானமும், மெய்ஞானமும் நமக்குள் வளர்ச்சி பெற முடியாமல் தடுக்கப்படுகிறது. நாம் அனைவரும் உடலாலும், மனதாலும், உயிராலும் முழுமை பெற முயற்சிக்க வேண்டும். இந்த முழுமை நிலையை நோக்கி நாம் பயணிக்கும் போது நம்முடைய கற்பனை சிறுகச்சிறுக நம்மை விட்டு விலகும். வாழ்க வளமுடன்...


💥 இன்றைய மூலிகை


💥 கருஞ்சீரகம் தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm, 

வெந்தயம் – 250gm,

ஓமம் – 100gm


💥 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.


💥 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.


💥 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, 

பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய்  கட்டுக்குள் வைக்க படுகிறது. 


💥 ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.


💥 குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


💥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments