வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியகடன்
ஜூலை 14
💢🌏💢🌏💢🌏💢🌏💢🌏💢
🍀 இன்றைய நித்தியகடன்
🍀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍀 இன்றைய சாதகம்
🍀 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍀 இன்றைய நற்சிந்தனை
🍀 இரத்த மாதிரிகள், சளி மாதிரிகள் இவைகளை எல்லாம் ஆய்வு செய்யும்போது இதனுடைய உண்மைத்தன்மை என்ன என்று நமக்கு தெளிவாக புரிய வரும். இதில் எந்த வகையான கிருமி, எந்த அளவு இருக்கிறது? இந்த கிருமிகளுடைய உளவியல் தன்மை என்ன? எந்த உறுப்பை எந்த அளவு தாக்க கூடியது? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன? என்றெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இது போன்றே...
🍀 இன்றைய தற்சோதனை
🍀 நம்முடைய காந்த மாதிரிகள், எண்ண மாதிரிகள், உயிர் மாதிரிகள், மன மாதிரிகள் இவைகளை ஆய்வு செய்து அதனுடைய உளவியல் தன்மைகள் இதற்கும் நமக்கும் இடையே இருக்கும் நட்பு, பகை என இவையனைத்தையும், நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவைகளை எல்லாம் ஆய்வு செய்து தெரிந்துகொள்ள விஞ்ஞானத்தில் இன்னும் எந்த கருவிகளையும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் தியானப் பயிற்சியின் மூலம் இவைகளின் பல்வேறு நிலைப்பாடுகளையும், மேலும் இவற்றின் உள், வெளி இயக்கங்களையும் முழுமையாக நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
🍀 இன்றைய பண்புப்பயிற்சி
🍀 உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளையெல்லாம் பயன்படுத்தி நம்முடைய மனதின், உயிரின் பல்வேறு உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும். மேலும் காந்தத்தில் உள்ள தன்மைகளை சிறுகச்சிறுக சீரமைத்து, ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஒன்றிணைக்க நமக்கு கிடைத்த முழுமையான வாய்ப்பே, மனவளக்கலை பயிற்சி முறையாகும். நாள் தவறாமல் இப்பயிற்சியை செய்து பழகி வாழ்க்கையில் எல்லா வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்...
🍀 இன்றைய மூலிகை
🍀 செம்பருத்தி இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍀 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🍀 ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.
🍀 குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🍀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment