வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியகடன்
ஜூலை 13
🌿♨️🌿♨️🌿♨️🌿♨️🌿♨️🌿
♾️ இன்றைய நித்தியகடன்
♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♾️ இன்றைய சாதகம்
♾️ செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
♾️ இன்றைய நற்சிந்தனை
♾️ மனம் பல்வேறு வகைப்படும் பல்வேறு நிலையில் மனம் இயங்குகிறது. மனம் தனித்துவம் வாய்ந்த சிறப்பு நிலையாகும், பல்வேறு சிறப்புகளை உடையது மனம். இதனுடைய தன்மையை உண்மையை உணர்ந்துகொண்டு அதனை சரியாக வழிநடத்த மனிதர்களுக்கு தெரிய வேண்டும். அறிவும், திறமையும் இதற்கு நிறைவாக இருந்தால் தான் மனதை கையாளமுடியும். ஒரே மனம் என்று இல்லை ஒரே சிறப்பு என்று இல்லை பல்வேறு தன்மைகளும், பல்வேறு சிறப்புகளும் மனதிற்கு உண்டு.
♾️ இன்றைய தற்சோதனை
♾️ மனதை எதன்மீது செலுத்துகிறோமோ, மனம் அதுவாகிவிடும். மனதை எங்கே செலுத்துகிறோமோ அங்கே காந்தசக்தி குவியும். இவ்வாறு பல சிறப்பு இயக்கங்களை உடைய இந்த மனதை சரியான முறையில் இயக்கி பழக்க வேண்டும். மனதின் சரித்திரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் இதற்கான போதிய அறிவும், திறமையும் வளர்த்துக் கொள்ளவே மனவளக்கலை பயிற்சி சிறப்பாக வேதாத்திரி மகரிஷியால் வழங்கப்பட்டுள்ளது. இதனுடைய உண்மைகளை உணர்ந்து தற்சோதனை செய்து சிறப்பான மனோநிலையில் சிறப்பான வாழ்வை இப்பிரபஞ்சத்தில் வாழ்வோம்.
♾️ இன்றைய பண்புப் பயிற்சி
♾️ என்ன வேண்டுமானாலும் எண்ணலாம், எதை நினைத்தாலும் செய்து கொள்ளலாம். ஆனால் மனிதனாக பிறந்த தன்னுடைய நோக்கமும், வாழ வேண்டிய முறையும், மனதினுடைய சிறப்பும் உணர்ந்துகொண்டு தெரிந்துகொண்டு அதற்கு தக்கவாறு செயல்பட வேண்டும். சிந்தனை செய்து நாம் என்ன செய்ய வேண்டுமோ எப்படி செய்ய வேண்டுமோ அவ்வாறு செயல் செய்து வாழ்வதே இவ்வாழ்வின், மனிதப் பிறவியின் நோக்கமாகும். இப்பிறவியின் நோக்கத்திற்கு தக்க செயல் பண்புகளை வளர்த்துக் கொள்வோம். ஆறாவது அறிவில் முழுமை பெறுவதும் நம் கருமையத்தில் இருக்கக்கூடிய விலங்கின பதிவுகளை நீக்கிக் கொள்வதுமே மனிதப்பிறவியின் நோக்கமாகும். வாழ்க வளமுடன்...
♾️ இன்றைய மூலிகை
♾️ சின்ன வெங்காயம் 1, வேப்பிலை 5, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும்.
♾️ நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.
♾️ ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.
♾️ குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
♾️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment