வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியகடன்
ஜூலை 11
🎱🎲🎱🎲🎱🎲🎱🎲🎱🎲🎱
⛰️ இன்றைய நித்தியகடன்
⛰️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛰️ இன்றைய சாதகம்
⛰️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
⛰️ இன்றைய நற்சிந்தனை
⛰️ உணர்ச்சிவயப்படுதல், சினம், கவலை இதுபோன்ற நிலைகளில் மனம் சிக்கிக்கொண்டு இயங்கும் போது மனம் பிளவுபடுகிறது, சிதைவடைகிறது. இந்த மனச் சிதைவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வதே வாழ்வாகும். ஆரோக்கியம் என்பது மனச்சிதைவு இல்லாமல் வாழ்வது. எல்லா வகையான வாழ்க்கை சூழ்நிலைகளையும் சரிவர புரிந்து கொண்டு அவைகளை நிதானமாக கையாளக்கூடிய அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சிந்தனைத் திறனை எந்த அளவுக்கு நாம் ஊக்குவித்துக் கொண்டு எல்லையற்ற இறைநிலையின் தன்மாற்றத்தோடு நின்று நம்முடைய தேவைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு ஒவ்வொரு இறைத் தன்மையையும், நமக்குள் உணர்கிறோமோ அதுவே நம் வாழ்க்கையாக மலர்கிறது. எண்ணமாகவும், செயலாகவும் விரிவடைகிறது.
⛰️ இன்றைய தற்சோதனை
⛰️ ஒரு செயலை செய்வதற்கு முன் நான்கு விஷயங்களை சிந்திக்க வேண்டும். அவை தேவை, அதன் அவசியம், கையிருப்பு, விளைவு இதன் அடிப்படையில் சிந்தித்து முடிவெடுங்கள். காலதாமதமாகலாம் தவறே கிடையாது. உணர்ச்சிவயப்பட்டு அவசரத்தில் செயலை செய்து பின்பு வருத்தப்படாதீர்கள். நிதானமாக தற்சோதனை செய்து உங்களை நீங்கள் உங்களுக்குள் தகவமைத்துக் கொள்ளுங்கள்.
⛰️ இன்றைய பண்புப் பயிற்சி
⛰️ எல்லா இயக்கத்திலும் இருக்கக்கூடிய இறைநிலையை உணர்ந்து கொள்ளும் பண்பில் அனைவரும் உயர்வோம். இந்த இறை நீதிக்கு முரண்பாடாக இங்கு எதுவுமே நடக்க இயலாது என்ற உண்மையை உணர்வோம். இந்தப் பண்பில் நாம் நம்மை அடையாளம் கண்டு கொண்டு நமக்கு அடுத்ததாக உள்ள குடும்பம், சமுதாயம், ஊர், உலகு இவைகளுக்கு செய்ய வேண்டிய கடமையையும் செய்வோம். இவை அனைத்தையும் உணர்ந்து சிறப்பாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
⛰️ இன்றைய மூலிகை
⛰️ துளசி தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌀 செய்முறை
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
⛰️ ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.
⛰️ குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛰️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
⛰️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment