வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியகடன்
ஜூலை 08
🍀🎯🍀🎯🍀🎯🍀🎯🍀🎯🍀
🏕️ இன்றைய நித்தியகடன்
🏕️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏕️ இன்றைய சாதகம்
🏕️ வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🏕️ இன்றைய நற்சிந்தனை
🏕️ உங்களை சுற்றி இருக்கக்கூடிய எல்லா கதவுகளின் பூட்டுக்களும் பூட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த பூட்டுகள் தானாக திறக்காது, அவைகளை நாம்தான் முயற்சி செய்து திறக்க வேண்டும். ஆனால் கால சக்கரசுழற்சிக்கு ஏற்ப எந்த கதவு எந்த நேரத்தில், திறப்பதற்கு தயாராக வேண்டும் என்று நேரம் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. காலத்தை தவறவிட்டால் அந்த பூட்டை திறக்க முடியாது.
🏕️ இன்றைய தற்சோதனை
🏕️ உங்களிடம் லட்சக்கணக்கான சாவிகள் இருக்கிறது. எந்த கதவு திறப்பதற்கு தயாராக இருக்கிறதோ, அதனுடைய சாவியை தேடி கண்டுபிடித்து திறக்க வேண்டும். பதட்டமான மனோநிலையில் நீங்கள் இருப்பீர்களேயானால், உங்களால் சரியான சாவியை கண்டுபிடிக்க இயலாது. காலத்தை தவறவிட்டு விடவும் கூடாது சரியான சாவியையும் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி ஒரு சூழ்நிலையில் மனம் பக்குவப்பட்ட நிலையில் இருந்தால் மட்டும்தான் நாம் இந்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.
🏕️ இன்றைய பண்புப்பயிற்சி
🏕️ காலை முதல், காலை வரை எப்போதும் நிதானமாக வாழ்வதற்கு, பயிற்சி செய்யுங்கள் முயற்சி செய்யுங்கள். இந்த நிதானமே உங்களுடைய வாழ்வின் கதவுகளை திறப்பதற்கான அடிப்படை தகுதியோடு, நம்முடைய அடுத்த சந்ததிகளை வளர்த்து இச்சமுதாயத்திற்கு அர்ப்பணிப்போம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே. வாழ்க வளமுடன்...
🏕️ இன்றைய மூலிகை
🏕️ கொத்தமல்லி ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🏕️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🏕️ ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.
🏕️ குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🏕️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🏕️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment