வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியகடன்
ஜூலை 07
💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥
⚫ இன்றைய நித்தியகடன்
⚫ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⚫ இன்றைய சாதகம்
⚫ புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
⚫ இன்றைய நற்சிந்தனை
⚫ எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் அவரவர்களுடைய கருமைய தன்மையே அடிப்படை காரணமாக இருக்கின்றது. வள்ளுவர் இதனை கூறியிருக்கிறார்.
"ஏனைய நன்மைக்கும் தீமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்"
⚫ அவரவர்களுடைய வாழ்க்கையில் நடைபெறக்கூடிய இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அவரவர்களுடைய கருமைய தன்மையே காரணம். இந்த உண்மையை மேலும் ஆழமாக சிந்தித்து தெளிவு பெறுவோம்.
⚫ இன்றைய தற்சோதனை
⚫ கருமையத்தினுடைய கலங்கங்கள், அதனுடைய பூர்வ புண்ணிய பலன்களுமே ஒரு மனிதர்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது, என்பதை உணர்ந்ததால் தான் நமக்கு சிறப்பான யோக நெறிகளை முன்னோர்கள் பகுத்து ஆய்ந்து வகுத்து கொடுத்து இருக்கிறார்கள். நம்முடைய கருமையத்தின் தன்மையை நம்மால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். தீமைகளை குறைத்துக் கொண்டு, நன்மைகளை பெருகிக் கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தற்சோதனையும், தவமும் இதற்காகவே அன்போடு அருளப்பட்டதாகும்.
⚫ இன்றைய பண்புப் பயிற்சி
⚫ எந்த ஒரு மாற்றமானாலும், அது காலம் எடுத்துக் கொண்டு மெதுவாக நகரும் போதுதான், நீடித்து நிலைத்து இருக்கும் இந்த உண்மையை சிந்தனை செய்து சிறுக சிறுக நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு நம்பிக்கையோடு, ஒவ்வொரு நகர்வையும் கால சூழ்நிலையையும் பயிற்சி முறைகளையும் ஏற்றுக் கொண்டு செய்வோமாக. இந்த உண்மையை மறவாது இதனோடு இணைந்து சிந்தித்து உயர்வோம். சின்னச் சின்ன மாற்றங்கள் நிச்சயமாக நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டு வாழும் பண்பே மதிப்பு மிக்கதாகும், இப்பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
⚫ இன்றைய மூலிகை
⚫ இஞ்சி + சின்ன வெங்காயம் + நீராவி பிடித்தல்
⚫ இஞ்சி 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
⚫ செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
⚫ சின்ன வெங்காயம் 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
⚫ செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
⚫ நீராவி பிடித்தல்:-
குடிநீர் 1,1/2 லிட்டர்
நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
⚫ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், குறிப்பு:- இஞ்சி சாறும், சின்ன வெங்காயம் சாறும் குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது.
⚫ ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.
⚫ குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⚫ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
⚫ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment