நித்தியகடன் ஆகஸ்ட் 01 2021

🔰🔶🔰🔶🔰🔶🔰🔶🔰🔶🔰

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஆகஸ்ட் 01*

🔰🔶🔰🔶🔰🔶🔰🔶🔰🔶🔰

⛳ *இன்றைய நித்தியகடன்*

⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

⛳ *இன்றைய சாதகம்*

⛳ ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
⛳ *இன்றைய நற்சிந்தனை*

⛳ இந்த பூமியை சுற்றி பல தரப்பட்ட மண்டலங்கள் இருக்கின்றன. காற்று மண்டலம், வெப்ப மண்டலம், ஓசோன் மண்டலம், ஹீலியம் மண்டலம் என பலதரப்பட்ட மண்டலங்கள் இருக்கின்றன. இந்த மண்டலங்கள் எல்லாம் இந்த பூமியையும் பூமியில் வாழும் உயிர்களையும் பாதுகாக்கின்றது. இந்த பாதுகாப்பு வளையம் சிறப்பான முறையில் இருக்கும் வரையில் தான் நம்முடைய வாழ்க்கை நம்பகத்தன்மை உடையதாக இருக்கும்.

⛳ *இன்றைய தற்சோதனை*

⛳ இயற்கையை மாசுபடுத்தி விட்டு இந்த பூமியில் நம்மால் நம்பிக்கையோடு காலத்தை கடத்த இயலாது, வாழ்க்கையை வாழ முடியாது. மாசுகளிலிருந்து இந்த பூமியை பாதுகாப்பது நம்முடைய வாழ்க்கையை நாமே பாதுகாத்துக் கொள்வதே ஆகும். அது வேறு இது வேறு அல்ல. நம்முடைய வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டுமானால் இயற்கையை பாதுகாத்தே ஆக வேண்டும். இன்னும் ஒரு படி மேலே சென்று இயற்கையை மதித்தால் மட்டும் தான் நம்முடைய வாழ்க்கை பாதுகாப்பானதாகவும், மதிப்புடையாதகவும் இருக்கும்.

⛳ *இன்றைய பண்புப் பயிற்சி*

⛳ மீண்டும் மீண்டும் பிழைகளிலிருந்தும், தவறுகளிலிருந்தும், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும் பண்பில் உயரவேண்டும். இது ஒரு நாள் இரண்டு நாளில் முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம். இருப்பினும் அதற்கான நல்லதோர் சரியான திட்டத்தை வகுத்துக் கொண்டு பிழைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பண்பில் உயர்வோம். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும் பிழைகளை திருத்தம் செய்து கொண்டு சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இவற்றை நடைமுறைபடுத்தி இறை ஞானத்தோடு வாழ்வோம். வாழ்க வளமுடன்...

⛳ *இன்றைய மூலிகை*

⛳ *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

⛳ *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

⛳ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

⛳ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

⛳ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments