🎑🏮🎑🏮🎑🏮🎑🏮🎑🏮🎑
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 26*
🎑🏮🎑🏮🎑🏮🎑🏮🎑🏮🎑
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 புதன்கிழமை இன்று பௌர்ணமி காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்,
காலை:- தீபப்பயிற்சி.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 எந்த ஒரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், பொருள்துறை அருள்துறை இரண்டிலும் அவர்கள் நிறைவாக இருக்க வேண்டும். எவரொருவர் தன்னுடைய வாழ்க்கை சூழ்நிலையில் மற்றவர்களை வைத்து சிந்தித்து பார்க்கிறாறோ, மற்றவருடைய வாழ்க்கை சூழ்நிலையில் தன்னை வைத்து சிந்தித்து பார்க்கிறாறோ, அவரால்தான் பொருள் துறையிலும் அருள் துறையிலும் உண்மையான வெற்றி பெறமுடியும். மேலும் இவற்றில் முன்னேற்றம் காணும்போது உடல், உயிர், மனம், அறிவு என்று எல்லா நிலைகளிலும் இதனை நாம் பொருத்திப் பார்க்கும் மனோ பக்குவம் அமைந்துவிடும்...
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 பிறர் துன்பத்தை தன் துன்பமாகவும், தன்னுடைய மகிழ்ச்சியை பிறர் மகிழ்ச்சியாகவும் பாவிக்கும் மனோபாவம் எப்போது உருவாகிறதோ, அப்போது அவர் அருள் துறையில் ஞானத்திற்கு தகுதி உடையவராக உருவாகிறார். பல்வேறு பாவனையோடு அலைந்து திரிந்த மனதை, உயிரில் உண்மையான பாவனைக்கு உயர்த்தி அதில் நிலைபெறச் செய்ய வேண்டும். மனதை டெல்டா நிலைக்கு சும்மா இருக்க செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌀 தற்போது உள்ள காலகட்டத்தில் நம்முடைய கருவமைப்பு தன்மையில், இன்னும் பல தரப்பட்ட தன்மாற்றங்கள் நடைபெற வேண்டி உள்ளது. அவைகளெல்லாம் உருவாகி மூளை செல்களுக்குள் நிலை பெற்று வரும்போதுதான் மனம் சும்மாயிருக்க ஆயத்தமாகும். ஆக இப்போதைக்கு அதற்கான முயற்சிகள் செய்து பழகலாம் சித்தி ஆகாது. நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. பயணிப்போம், பயன்பெறுவோம், பயன்பெற செய்வோம். வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *இஞ்சி + சின்ன வெங்காயம் + நீராவி பிடித்தல்*
🌀 இஞ்சி 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌀 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌀 சின்ன வெங்காயம் 15 கிராம்
தண்ணீர் 30ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌀 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌀 நீராவி பிடித்தல்:-
குடிநீர் 1,1/2 லிட்டர்
நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.
🌀 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், சின்ன வெங்காயம் சாறும் குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment