🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 24*
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
❄️ *இன்றைய நித்தியகடன்*
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ *இன்றைய சாதகம்*
❄️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
❄️ *இன்றைய நற்சிந்தனை*
❄️ நாம் ஒன்றை எண்ணுவதால் அது நம் வாழ்வில் அப்படியே நடந்துவிடாது. நாம் ஒன்றை எண்ணாமல் இருப்பதால் அது நம் வாழ்வில் நடக்காமல் இருக்கப் போவதுமில்லை. ஆக ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் என்ன நடைபெற வேண்டும்? அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட வேண்டிய அனுபவங்கள் என்னென்ன, என்பதை அவரவர்களுடைய கருமையத்தில் ஏற்கனவே அது இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கருமையத்தின் இரகசியங்களை உணர்ந்து கொள்வதற்காகவே நமக்கு குண்டலினியோகம் அமைந்திருக்கிறது...
❄️ *இன்றைய தற்சோதனை*
❄️ மறைபொருளாக உள்ள இறைநிலை, இறைத்துகள், விண்துகள், காந்தம், பஞ்ச தன்மாத்திரைகள், ஜீவகாந்தம் கருமையம், வினைபதிவுகள், மனம், அறிவின் முழுமைப் பேறு இந்த பத்து விதமான மறை பொருள்களையும் நாம் பிழையில்லாமல் நேரடியாக புரிந்துகொள்ளவேண்டும். மாற்றிப் புரிந்து கொண்டோமேயானால் அதிலிருந்து வேறு பல சிக்கல்கள் உருவாகும். இவைகளின் நுட்பநிலை அமைப்புகளை சரியாக உணர்வதற்கு, மனவளக்கலை பயிற்சி முறைகளை அளவோடும் முறையோடும் நாள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
❄️ *இன்றைய பண்புப்பயிற்சி*
❄️ அனைத்து மூலக்கூறுகளுக்கும் காந்தமே முதல் பொருளாகும். காந்தம் என்னும் தெய்வீக பெருநிலையை அடிப்படையாக கொண்டு, இந்த பிரபஞ்ச இயக்கங்கள் தோற்றங்கள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. அதுவேதான் மனமாகவும் இயங்குகிறது. மனதை முழுமைப்படுத்தி கொண்டு பக்குவப்பட்ட நிலையில், அதே மனதினுடைய பல்வேறு நிலைகளை அறிந்து உணர்ந்து கொள்ள முடியும். உள்ளதை உள்ளவாறு உணர்வோம், உயர்வோம். வாழ்க வளமுடன்...
❄️ *இன்றைய மூலிகை*
❄️ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
❄️ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
❄️ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
❄️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
❄️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
❄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
❄️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment