🌀🌸🌀🌸🌀🌸🌀🌸🌀🌸🌀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 23*
🌀🌸🌀🌸🌀🌸🌀🌸🌀🌸🌀
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 இந்த மனிதப் பிறவியினுடைய நோக்கம் விலங்கின பதிவுகளை நீக்கிக்கொண்டு, ஆறாவது அறிவில் முழுமை பெறுவதே ஆகும். நமது வாழ்வின் நோக்கம் விலங்கின பதிவுகளை நீக்கி கொள்வதிலும், ஆறாவது அறிவில் முழுமை பெறத்தக்க செயல்களை செய்வதே வாழ்வின் நோக்கம் ஆகும். இதிலிருந்து சிறிதளவு கூட விலகிவிடாமல் வாழ்க்கையை திட்டமிட்டு வாழ வேண்டும்.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 எல்லா வகையான செயலுக்கும் விளைவு கட்டாயம் உண்டு. இந்த செயல் விளைவு நீதி ஒருநாளும், ஒருபோதும் யாருக்காகவும் மாறப்போவது இல்லை. ஞானம் சார்ந்த செயல்களை செய்யும்போது ஞானம் வளர்கிறது. ஞான செயலை செய்வோம், ஞான விளைவுகளை உருவாக்குவோம். ஞான விளைவு தரும் செயல்களை தற்சோதனை செய்து தேர்வு செய்து கொள்வோம். திட்டமிட்டு தொண்டாற்றி இன்பம் காண்போம்.
🍁 *இன்றைய பண்புப் பயிற்சி*
🍁 பரவலாக நமக்கு புரிந்த விஷயத்தில் மட்டுமே நம்மால் திறன்பட செயல்களை செய்து வாழ முடியும். நமக்கு புரிய வேண்டிய விஷயங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைய இருக்கிறது. அவைகளை புரிந்துகொள்ளக்கூடிய பண்பில் உயர்வோம். இந்த உயர்வான பண்பில் செயல்களை அமைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட வாழ முனைவோம். வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🍁 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment